9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்.. சிறுமி விபரீத முடிவு!
9th Standard Student Killed Herself in Chhattisgarh | சத்தீஸ்கரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், 9 ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ராய்ப்பூர், நவம்பர் 26 : சத்தீஸ்கர் (Chhattisghar) மாநிலம், ஐஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பகிஷா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குல்திபன் டாப்னோ என்ற நபர் பணியற்றி வருகிறார். அவர் அந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர் பாலியல் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி
பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் மன அழுத்தம் தாங்காமல் நவம்பர் 23, 2025 அன்று பள்ளி வளாகத்திலே அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!
கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி
சிறுமி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், சிறுமியின் மரணம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போலீசார், அவர் தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க : புதிய தொழிலாளர் குறியீடுகள் சொல்வது என்ன? இதில் ஒருவரின் அடிப்படை சம்பளம் பாதிக்குமா? யார் பயன் பெறுவார்கள்?
மரணத்திற்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் – மாணவி
மாணவியின் அந்த தற்கொலை கடிதத்தில், தனது மரணத்திற்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என அவர் குறிப்பிட்டு இருந்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.