ஈரான் தாக்குதலால் பதற்றம்.. இந்தியாவில் இன்று ஒரே நாளில் 444 விமானங்கள் ரத்து!
444 Flights Cancelled In India | ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாதிரி புகைப்படம்
புதுடெல்லி, மார்ச் 01 : ஈரான் (Iran) அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த அமெரிக்கா (America), நேற்று (பிப்ரவரி 28, 2026) இஸ்ரேல் (Israel) உடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரான் உருகுலைந்து உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – ஈரான் உட்சபட்ச தலைவர் பலி
அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என ஈரான் உறுதி அளிக்க வேண்டும் என டிரம்ப் கோரிய நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி காமனெயி பலியாகியுள்ளார். இது ஈரானை கடும் கோபமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க : தேர்வு அறையில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி.. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்!
பதிலடி கொடுத்து வரும் ஈரான்
வான்வழி தாக்குதல் நடத்தி ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிலைகுலைய செய்த நிலையில், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுடன் தொடர்புடைய சில பகுதிகளை ஈரான் குறி வைத்து தாக்கி வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றம் காரணமாக நாடுகள் தங்களின் வான்வெளிகளை மூடியுள்ளன.
இதையும் படிங்க : கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவும் விமானங்களை ரத்து செய்துள்ளது. இன்று நாடு முழுவதும் சுமார் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று முதலே தாக்குதலை தொடங்கிய நிலையில், நேற்றில் இருந்து பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.