தர்பூசணி சாப்பிட்டு 4 பேர் பலியான வழக்கில் திடீர் திருப்பம்.. எலி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு!
4 Died After Eating Watermelon In Mumbai | மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், தர்பூசணி பழத்தில் எலி மருந்து கலந்து இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பலியான குடும்பம்
மும்பை, மே 08 : மும்பையில் (Mumbai) பிரியாணி சாப்பிட்டுவிட்டு தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பசம் தொடர்பாக தடவியல் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 4 பேர் மரண வழக்கில் தடயவியல் அறிக்கை கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரியாணி சாப்பிட்டுவிட்டு தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலி
மராட்டிய மாநிலம், மும்பையில் உள்ள பைதோனி பகுதியில் ஏப்ரல் 26, 2026 அன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து பலியாகினர். அவர்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டதால் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், இந்த விவகாரம் தொடர்பாக தடவியல் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : வெளிநாட்டு துப்பாக்கி.. பக்கா ஸ்கெட்ச்.. பாஜக தலைவரின் உதவியாளர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன?
தர்பூசணி பழத்தில் எலி மருந்து கலந்திருந்தது விசாரணை அம்பலம்
தடயவியல் சோதனை அறிக்கையில், அந்த தர்பூசணி பழத்தில் எலி மருந்து கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் சாப்பிட்டு மிச்சம் இருந்த தர்பூசணி பழத்தை சோதனை செய்து பார்த்தபோது, அதில் ஜிங்க் பாஸ்பைடு என்ற நச்சுத்தன்மை மிகுந்த எலி மருந்து கலந்திருந்தது தெரிய வந்துள்ளது. பலமுறை நடத்தப்பட்ட தீவிர பரிசோதனைகளுக்கு பிறகே அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : Operation Sindoor : 88 மணி நேரத்தில் அதிர்ந்த பாகிஸ்தான் .. ஆபரேஷன் சிந்தூர் பேரழிவின் முன்னோட்டத்தை விளக்கும் வீடியோ!
தர்பூசணி பழத்திற்கு எலி மருந்து வந்தது எப்படி?
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு தர்பூசணி பழத்தில் எலி மருந்து கலந்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், அது எப்படி கலக்கப்பட்டது என்பது குறித்து தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், தர்பூசணி பழத்திற்குள் எலி மருத்து செலுத்தி கொலை அரங்கேறியுள்ளதா, அல்லது அந்த குடும்பத்தினரே தற்கொலை செய்துக்கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.