32 விமான நிலையங்கள் மூடல்… இந்தியா எடுத்த ஆக்ஷன்.. லிஸ்ட் இதோ!
india pakistan conflict : இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்கள் 2025 மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி, மே 10: இந்திய பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் (India Pakistan Conflict) காரணமாக, நாட்டில் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்கள் 2025 மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விமான போக்குவரத்து அமைச்சகம் மூட உத்தரவிட்டு இருக்கிறது. இந்திய பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்த வருகிறது. இதனால், இருநாடுகளுக்கு ஒன்றுக்கொன்று தாக்குதல் நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
32 விமான நிலையங்கள் மூடல்
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2025 மே 8ஆம் தேதி இரவு பாகிஸ்தான் காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனை இந்தியா நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இதனால், இந்திய எல்லைக்குள் ட்ரோன் வருவது தடுக்கப்பட்டது. இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், இன்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்ற நிலையில், அதனையும் இந்திய சுட்டு வீழ்த்தியது. இதனை அடுத்து, லாகூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்தியாவும் பதிலடி தாக்குதலை நடத்தி வருவதாக தெரிகிறது.
இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 மே 15ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எடுத்த நடவடிக்கை
வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் உள்ள 32 விமான நிலையங்களில் மூடப்பட்டுள்ளன. அடம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, பூஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சால்மர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்க்ரா (கக்கல்), கேஷோத், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர், நத்ரஹான், லெஹ், லுத்ரஹான், லெஹ், லூதியானா, பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோயிஸ் மற்றும் உத்தரலை ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்கள் 2025 மே 15ஆம் தேதி வரை மூடப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவில் பல விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், சண்டிகர், பூஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட்டுக்கான விமானங்கள் மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை ரத்து செய்யப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், இண்டிகோ விமானமும் 10 இடங்களுக்கு சேவையை ரத்து செய்யதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.