விஷமுள்ள பிரவுன் ரிக்ளூஸ் சிலந்தி கடியால் ஏற்பட்ட கடுமையான உடல்நல பாதிப்பை மைநிதா என்ற பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். முழு ஆரோக்கியத்துடன் இருந்த அவர், திடீரென ஏற்பட்ட இந்த சிலந்தி கடியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் பல வாரங்கள் சிகிச்சை பெற்றார்.