பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த ஹரிஷ் ராணா, 2013 ஆம் ஆண்டு விடுதியின் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் கடுமையான மூளை பாதிப்புக்கு உள்ளானார். இந்த விபத்திற்குப் பிறகு, கடந்த 12 ஆண்டுகளாக சுய நினைவு இல்லாமல் இருந்து வருகிறார். தற்போது 31 வயதான அவர், முழுமையாக படுக்கையிலேயே இருப்பதுடன், சுவாசிக்கவும், உணவுக்காகவும் குழாயின் உதவியோடு வென்டிலேட்டர் சப்போர்ட்டில் வாழ்ந்து வருகிறார்.