லிஃப்டில் சிறுவனை சரமாரியாக தாக்கி, கையை பிடித்து கடித்த நபர்.. ஷாக் சம்பவம்!

12 Year Old Boy Attacked in Maharashtra Lift | மகாராஷ்டிரா 12 வயது சிறுவனை ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லிஃப்டில் சிறுவனை சரமாரியாக தாக்கி, கையை பிடித்து கடித்த நபர்.. ஷாக் சம்பவம்!

வைரல் வீடியோ

Updated On: 

10 Jul 2025 13:19 PM

மகாராஷ்டிரா, ஜூலை 10 : மகாராஷ்டிராவில் (Maharashtra) 12 வயது சிறுவனை ஒருவர் லிஃப்டில் வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த நபரின் செயலை கண்டித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர். தான் வருவதற்கு முன்னதாக சிறுவன் லிஃப்டை மூடியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் இந்த கொடூர தாக்குதலை  நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த சம்பவம் தொடர்பான விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

லிஃப்டில் வைத்து சிறுவனை சரமாரியாக தாக்கிய நபர்

மகாராஷடிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் 12 வயது சிறுவனை ஒருவர் சரமாரியாக தாக்கி, கையை பிடித்து கடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து கூறியுள்ள பாதிக்கப்பட்ட சிறுவன், நான் லிஃப்டில் வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒன்பதாவது மாடியில் லிஃப்ட் நின்றது. அங்கு வெளியே யாரும் இல்லை என்று தான் நான் லிப்டின் கதவை மூடினேன். அப்போது அந்த அங்கிள் உள்ளே வந்தார். உள்ளே வந்த அவர் எதுவும் கூறாமல், என்னை அடிக்க தொடங்கினார். அப்போது அவரிடம் என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், வெளியே வா நான் உன்னை கத்தியால் குத்துகிறேன் என்று கூறினார். பிறகு என் கையை பிடித்து கடித்தார், நான் அவரை தள்ளி விட்டேன் என்று கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ

இந்த விவகாரம் குறித்து சிறுவனின் தந்தை கூறியதாவது, என் மகன் வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். அதன் காரணமாக அவர் 14வது மாடியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது, அவரின் நண்பரின் தந்தை லிஃப்டில் நுழைந்ததும் எனது மகனை தாக்கியுள்ளார். லிஃப்ட் தரை தளத்திற்கு வரும் வரை அவர் தொடர்ந்து தாக்கி வந்துள்ளார். லிப்ஃடில் கீழே இறங்கிய பிறகும் அவர் தாக்கிய நிலையில் அங்கே இருந்த காவலாளி தடுத்து நிறுத்தி உள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற போது லிப்டில் இருந்த பெண் ஒருவர் வீட்டை தரை தளத்தில் நிறுத்தி எனது மகன் வெளியே வர உதவி செய்துள்ளார். இருப்பினும் அடிப்பது நிறுத்தாத அந்த நபர் குடியிருப்பின் வாசல் வரை எனது மகனை எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : மது போதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற இளம் பெண்.. ஷாக் வீடியோ!

இந்த விவகாரம் குறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் முதற்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.