Health Tips: ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை! இதை செய்தால் சோர்வே இருக்காது..!
Healthy Habits: மோசமான காலை பழக்கங்களால் நம் உடல்நலத்திற்கு நாமே தீமை செய்து கொள்வதாகும். எனவே, உடற்பயிற்சி என்பது ஜிம்மிற்குச் செல்வது, நடப்பது அல்லது கடுமையான பயிற்சிகளைச் செய்வது மட்டுமல்ல, நமது காலைப் பழக்கவழக்கங்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காலை பழக்கவழக்கங்கள்
இன்றைய காலத்தில் பலரும் உடல் பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய் (Diabetes) உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக, நாம் அனைவரும் ஆரோக்கியமான உடலையும், சுறுசுறுப்பான மனதையும் வைத்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் மோசமான காலை பழக்கங்களால் (Morning Habit) நம் உடல்நலத்திற்கு நாமே தீமை செய்கிறோம். எனவே, உடற்பயிற்சி என்பது ஜிம்மிற்குச் செல்வது அல்லது கடுமையான பயிற்சிகளைச் செய்வது மட்டுமல்ல, நமது காலைப் பழக்கவழக்கங்கள் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி, உங்கள் காலையை சரியாகத் தொடங்கினால், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
சீக்கிரம் எழுந்திருப்பது அவசியம்:
நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். அதன்படி, அதிகாலையில் எழுந்திருப்பது நன்மை பயக்கும். நம் உடலை ஆரோக்கியமாக இருக்க காலை 5 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறந்தது. இவை நச்சு நீக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துவதற்கு இது மிகவும் சாதகமான நேரம். தாமதமாக விழித்திருப்பது அல்லது தொடர்ந்து சோம்பேறியாக இருப்பது உடற்தகுதிக்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம்.
ALSO READ: சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கியதாக உணர்வா..? சரிசெய்யும் கிட்சன் பொருட்கள்..!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தல்:
நீங்கள் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது. பலர் இவ்வாறு செய்வது கிடையாது. இது சோம்பல் மற்றும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது.
மென்மையான உடற்பயிற்சி:
காலை நேரம் லேசான உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம். இது தசைகளை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சுறுசுறுப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது. யோகா, நடைபயிற்சி, தியானம் போன்றவை உங்கள் உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பலர் காலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இதற்கு முன்பு, கை மற்றும் கால்களுக்கு சிறிது மென்மையாக உடற்பயிற்சி செய்வது நல்லது. இப்படி செய்யாமல் விட்டால், தசைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
காலை உணவில் ஊட்டச்சத்து:
காலை உணவு என்பது அன்றைய நாளுக்கான ஆற்றலின் அடித்தளமாகும். பலர் லேசான அல்லது சமநிலையற்ற காலை உணவை சாப்பிடுகிறார்கள். இது உடற்தகுதிக்கு நல்லதல்ல. புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காலை உணவு அவசியம். ஓட்ஸ், முட்டை, வேர்க்கடலை அல்லது ப்ரஷான பழங்கள் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
ALSO READ: காலை உணவில் தவறாமல் இது இடம்பெறுமா..? இதய நோய் பிரச்சனை உண்டாகலாம்!
மன ஆரோக்கியம்:
உடற்தகுதி என்பது உடலுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. காலை தியானம் மன அழுத்தத்தைக் குறைத்து நாள் முழுவதும் கவனத்தைத் தக்கவைக்க உதவுகிறது. பலர் இதைப் புறக்கணிக்கிறார்கள், இதன் காரணமாக அவர்கள் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருந்தாலும் சோர்வாக உணர்கிறார்கள்.