Health Tips: மழைக்காலத்தில் இவை ஆரோக்கியமற்ற காய்கறிகள்.. ஏன் இவற்றை தவிர்க்க வேண்டும்..?
Unhealthy Vegetables in Monsoon: மழைக்காலத்தில் சில காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லையென்றால், இவற்றை பிரஷாக எடுத்து கொள்வது சிறந்தது. வாங்கி நாள்பட்ட காற்கறிகளாக இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவையாக இருக்கும்.

ஆரோக்கியமற்ற உணவுகள்
மழைக்காலம் (Rainy Season) புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் தருகிறது. ஆனால் இது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த பருவத்தில் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் கிருமிகள் வேகமாக வளரும். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், இந்த காய்கறிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன்படி, மழைக்காலத்தில் சில காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லையென்றால், இவற்றை பிரஷாக எடுத்து கொள்வது சிறந்தது. வாங்கி நாள்பட்ட காற்கறிகளாக (Vegetables) இருந்தால் இவற்றை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவையாக இருக்கும். அந்தவகையில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத அல்லது உடனடியாக சாப்பிட வேண்டிய காய்கறி பட்டியல்களை தெரிந்து கொள்வோம்.
கீரைகள்:
மழைக்காலத்தில் எந்த வகையான கீரைகளாக இருந்தாலும் இதுபோன்ற இலை காய்கறிகளில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். இவற்றை உண்பதால் வயிற்று தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே, பிரஷான கீரைகளை வாங்கியவுடன் சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை மட்டும் சமைத்து சாப்பிடுங்கள். வேஸ்டாகிவிடும் என்று மற்றொரு வேளையில் எடுத்து கொள்ளாதீர்கள்.
ALSO READ: மழைக்காலத்தில் புரத உணவுகள் ஏன் முக்கியம்..? என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்?
முட்டைக்கோஸ்:
மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு விரைவாக அழுகிவிடும். இது பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம். இது சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் புட் பாய்சனை ஏற்படுத்தும்.
கத்தரிக்காய்:
மழைக்காலத்தில் கத்தரிக்காய் விரைவாக கெட்டுவிடும். இதில் உள்ள ஈரப்பதம் பூஞ்சை மற்றும் பூச்சிகளை உருவாக்குகிறது. இவை சாப்பிட்டால் தோல் ஒவ்வாமை மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
வெண்டைக்காய்:
வெண்டைக்காய் எண்ணெய் பசையுடையது. மழைக்காலத்தில் இதன் தன்மை அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிறு உப்புசம் ஏற்படும்.
தக்காளி:
மழைக்காலத்தில் தக்காளி விரைவாக அழுகி கெட்டுப்போகத் தொடங்கும். அழுகிய தக்காளி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், உணவு மூலம் பரவும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
காளான்:
காளான்கள் ஈரப்பதமான பகுதிகளில் வளரும் மற்றும் பூஞ்சைக்கு ஆளாகக்கூடியவை. எனவே, மழைக்காலத்தில் அவற்றை சாப்பிடுவது வயிற்று தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே, மழைக்காலத்தில் காளான்களை சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
ALSO READ: உடலில் இரும்புச்சத்து குறைவா..? சரி செய்ய உதவும் சைவ உணவுகள்!
மழைக்காலத்தில் எந்த வகையான காய்கறிகளை சாப்பிடலாம்..?
பாகற்காய், சுரைக்காய் மற்றும் பூசணி போன்ற கடினமான தோல்கள் கொண்ட காய்கறிகள் மழைக்காலங்களில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. அவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. மழைக்காலம் மட்டுமின்றி எந்த பருவ காலமாக இருந்தாலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு வேகவைக்க வேண்டும். பின்னர் காய்கறிகள் பயன்படுத்துவதற்கு முன்பு உப்பு கலந்த சூடான நீரில் நன்கு கழுவப்படுகின்றன.