Sugar Control Tips: நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Sugar Control Tips : வெந்தயத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோய் (Diabetic) காரணமாக மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சில வீட்டுப் பொருட்களைக் கொண்டே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். குறிப்பாக வெந்தயம் நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்து . வெந்தயத்தின் (Fenugreek) கசப்பு சுவை பலருக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் அதில் உடலுக்கு பல நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரைக் குடிப்பது பல நோய்களுக்கு ஒரு தீர்வாகும். இந்த நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், குறிப்பாக நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. வெந்தயத்தில் உள்ள நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெந்தயம்
வெந்தய நீரில் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. இதில் வைட்டமின் சி, தியாமின் (B1), ரிபோஃப்ளேவின் (B2), நியாசின் (B3), B6 மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின்களும் உள்ளன. இவை அனைத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
ஹார்மோன் சமநிலை
வெந்தய நீரைக் குடிப்பது உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும். இது உடல் செயல்பாடுகளுக்கு நல்லது. வெந்தய நீர் கல்லீரலுக்கும் நல்லது, மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் நன்மைகள்
இந்த வெந்தய நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறையும். மேலும் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீரிழிவு நோயால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்கவும். இதை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன், அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். விரும்பினால், வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)