Monsoon Health Tips: நெருங்கும் மழைக்காலம்.. காய்ச்சல், அஜீரண பிரச்சனை வராமல் தடுப்பது எப்படி?
Stay Healthy in the Monsoon: மழைக்காலம் தொடங்கும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில், பருவகால பழங்கள், லேசான உணவுகள் உட்கொள்ள வேண்டும். காரமான, அதிக எண்ணெய் சத்துள்ள உணவுகள் மற்றும் அதிக உப்பு தவிர்க்க வேண்டியது அவசியம். தண்ணீர் அதிகம் குடிப்பது, சுத்தமான சூழலை பராமரிப்பது போன்றவை மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

மழைக்கால ஆரோக்கியம்
மழைக்காலம் (Monsoon) அதன் குளிர்ச்சியான மழையால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடைய செய்கிறது. மழைக்காலம் தொடங்கியதும் அதனுடன் பல நோய்களும் வந்து சேரும். குறிப்பாக, பாக்டீரியா தொற்றுகளின் ஆபத்து மிக அதிகம் ஆகும். டெங்கு, மலேரியா மற்றும் டைபாய்டு (Typhoid) ஆகியவற்றின் ஆபத்து மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. சுத்தம் மற்றும் கை கழுவுதல் போன்றவற்றை சரிவர பின்பற்றப்படாத மக்கள், மழைக்காலத்தின்போது வைரஸ் மற்றும் பாக்டீரியா பரவும் அதிகரிக்கும். மேலும் இந்த பருவத்தில் நீரிழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளும் உண்டாகும். இதற்கு காரணம், மழைக்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். தாகம் எடுக்காததால், பெரும்பாலானோர் தண்ணீர் குடிப்பதில்லை.
மழைக்காலத்தில் நோய் ஏற்பட காரணம் என்ன..?
மழைக்காலத்தின்போது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் நம் உடலை பல தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. ஒருபுறம், மழைக்காலம் குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும். மறுபுறம் ஈரப்பதம், அழுக்கு மற்றும் மாற்றிவரும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இதனால் சளி, வைரஸ் காய்ச்சல், வயிற்று தொற்று, ஃபுட் பாய்சன் மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், பருவத்திற்கு ஏற்ப உணவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
பருவகால பழங்கள்:
பருவகால பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றனல். அதன்படி, மழைக்காலங்களில் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, லிச்சி மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்களை சாப்பிடுவது உள்ளது. இவற்றில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது:
மழைக்காலங்களில் ஏற்படும் பொதுவாக உடலில் காரமான உணவுகள் செரிமான பிரச்சனைகளை மோசமாக்கும்.மேலும், இவை உடலின் செரிமான திறனை பாதிக்கும். காரமான உணவுகளை உண்பது மழைக்காலத்தில் அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே, மழைக்காலத்தில் இட்லி போன்ற லேசான உணவை சாப்பிடுவது நல்லது.
பிரைடு ரைஸ்:
மழைக்காலத்தில் பிரைடு ரைஸ் மிகவும் விரும்பப்படும் உணவுகளாக உள்ளது. இருப்பினும், இவை செரிமானத்தை பாதிக்கலாம். பிரைடு ரைஸில் உள்ள அதிக கொழுப்பு சத்து செரிமானத்தை மெதுவாக்கும். இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் மழைக்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை பராமரிக்க இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உப்பை தவிர்த்தல்:
அதிகப்படியான உப்பு உடலில் நீர் தேக்கம் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இது ஈரப்பதமான வானிலையில் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். பருவமழை உணவின் ஒரு பகுதியாக உப்பு உட்கொள்ளலை குறைப்பது திரவ சமநிலையை பராமரிக்கவும், தேவையற்ற உடல்நல சிக்கல்களை தவிர்க்கவும் உதவுகிறது.