Health Tips: புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்வது அவசியமா? இது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

Protein Powder Side Effects: கடைகளில் எளிதாக கிடைக்கும் புரதப் பொடியை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட உணவில் பால், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் மற்றும் சீஸ் போன்ற உணவுகளிலிருந்து போதுமான புரதத்தை பெறலாம்.

Health Tips: புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்வது அவசியமா? இது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

புரோட்டீன் பவுடர்

Published: 

29 Jan 2026 14:52 PM

 IST

ஆரோக்கியமான உடலை பராமரிக்க புரதம் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகும். இது தசையை உருவாக்குவதற்கும், உடலை வலுப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான செல்களை பராமரிப்பதற்கும் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால்தான் உடற்பயிற்சி செய்பவர்களிடையே புரதம் அதிக தேவையாக உள்ளது. அனைவருக்கும் தொடர்ந்து புரதம் (Protein) தேவைப்பட்டாலும், உடற்பயிற்சி (Exercise) செய்பவர்கள் தங்கள் தசைகளை வலுப்படுத்த அதை அதிகமாக உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ALSO READ: 15 நாட்களுக்கு ஒரு முறை.. ஒரு வேளை உண்ணாவிரதம்.. உடலுக்குள் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

அனைவரும் புரத பவுடர் எடுத்துக்கொள்ளலாமா?

புரதப் பொடியை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட உணவில் பால், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் மற்றும் சீஸ் போன்ற உணவுகளிலிருந்து போதுமான புரதத்தை பெறலாம். இருப்பினும், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியில் அக்கறை கொண்ட நபர்களிடையே புரத பவுடரை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், வணிக ரீதியாக கிடைக்கும் புரத பவுடர்களின் உடல்நல அபாயங்களை அதிகரிக்கலாம். அந்தவகையில் நீங்கள் அதிகமாக புரதத்தை உட்கொண்டால், தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

புரதம் ஏன் முக்கியமானது?

  • புரத பவுடரை எடுத்து கொள்வது உடல் தசைகளை கட்டமைத்து சரிசெய்ய உதவுகிறது .
  • இதை தொடர்ந்து எடுத்து கொள்வதன்மூலம் எலும்புகளை வலிமையாக்கும்.
  • உடலில் அதிகப்படியான புரதம் குவியும்போது நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாக வைத்திருக்கும்.
  • புரதம் எடுத்துகொள்வது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
  •  புரதம் ஒரு சீரான உணவின் ஒரு முக்கிய பகுதியாகும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

அதிகப்படியான புரத பவுடரின் தீமைகள்:

அதிகப்படியான புரத பவுடரை உட்கொள்வது உடலில் ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

சிறுநீரக பாதிப்பு:

அதிகப்படியான புரதம் சிறுநீரகங்களின் மீது சுமையை அதிகரிக்கிறது .​​

கல்லீரல் பிரச்சனைகள்:

அதிகப்படியான அளவு கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் .​

செரிமான பிரச்சனைகள்:

மலச்சிக்கல் , வாயு மற்றும் வயிற்றில் கனத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எடை அதிகரிப்பு:

தேவையற்ற கலோரிகள் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

எவ்வளவு புரதம் சரியானது?

  • ஒவ்வொரு நபருக்கும் ஒரே அளவு புரதம் தேவையில்லை.
  • ஒரு சாதாரண நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 0.8 முதல் 1 கிராம் புரதம் தேவைப்படுகிறது .
  • அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சற்று அதிக புரதம் தேவைப்படுகிறது.
  • அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பருப்பு வகைகள், பால், முட்டை, சீஸ் மற்றும் பீன்ஸ் போன்ற இயற்கை மூலங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ALSO READ: ஒமேகா-3 கொழுப்பு அமிலம் குறைவதால் உடலில் என்ன பிரச்னை ஏற்படும்? சரிசெய்வது எப்படி?

யார் தவிர்ப்பது நல்லது? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்..?

நீண்ட காலமாக சிறுநீரகம் அல்லது செரிமான பிரச்சனை உள்ளவர்கள் புரத பவுடரை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகாமல் புரதத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். புரதம் நமது ஆரோக்கியத்திற்கு அவசியம் என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே, சரியான அளவில் புரதத்தை உட்கொள்ளுங்கள். முடிந்தவரை, காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை மூலங்கள் புரதம் எடுத்து கொள்வது நல்லது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..