Health Tips: மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்கள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்?

Monsoon Gut Health: மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இவற்றை சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நன்கு கழுவிய பின்னரே சமைக்கவும். மழைக்காலத்தில் பச்சை இலை காய்கறிகள் சாப்பிடுவது வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

Health Tips: மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்கள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்?

குடல் ஆரோக்கியம்

Published: 

19 Nov 2025 19:09 PM

 IST

இந்தியா முழுவதும் இப்போது பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சில பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் வீடுகளில் கூட தண்ணீர் தேங்கி, நீரினால் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது நம் உடலில் தொற்று நோயை ஏற்படுத்தி வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு மற்றும் குடல் தொற்றுகள் மற்றும் புட் பாய்சன் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது குடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படும். இதனால்தான் மழைக்காலத்தில் (Rainy Season) சிலவற்றை செய்வது உங்கள் குடல் ஆரோக்கியத்தை (Gut Health) பாதுகாக்க உதவி செய்யும். அந்தவகையில், மழைக்காலத்தில் உங்கள் குடலை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழைக்காலத்தில் காலையில் எழுந்ததும் தொண்டை வறட்சியா..? இது ஏன் ஏற்படுகிறது?

மழைக்காலங்களில் குடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி..?

நோய் எதிர்ப்பு சக்தி:

மழைக்காலத்தில் காரணமே இன்றி உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும். எனவே, தொற்றுகள் மற்றும் நோய்களைத் தடுக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பது முக்கியம். மழைக்காலத்தில் முடிந்தவரை, பிரஸான சமைத்த உணவை உண்ணுவது பாதுகாப்பானது. அதேநேரத்தில், வெட்டி நீண்ட நேரம் வைக்கப்பட்ட பழங்கள் அல்லது சாலையோர வண்டிகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.  ஏனெனில் இது வயிற்று தொற்றுக்கு வழிவகுத்து, குடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்கள்:

மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இவற்றை சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நன்கு கழுவிய பின்னரே சமைக்கவும். மழைக்காலத்தில் பச்சை இலை காய்கறிகள் சாப்பிடுவது வயிற்று உபாதையை ஏற்படுத்தும். 2 முதல் 3 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற குளிர் காலங்களில் முடிந்தவரை பிரஸான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. இவ்வாறு செய்வது வயிற்றில் புழுக்கள் மற்றும் அழுக்குகள் நுழைவதை தடுக்கும்.

நீர்ச்சத்து:

மழைக்காலத்தில் தாகம் குறைவாக எடுக்கும் என்பதால், பலரும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கிடையாது. இவ்வாறு செய்வது தவறு. எந்த பருவ காலமாக இருந்தாலும் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். நீர்ச்சத்து குறைவதால் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு மற்றும் பலவீனம் ஏற்படலாம். அதிக தண்ணீர் குடிப்பது உங்கள் வயிற்றை சரியாக சுத்தம் செய்து, செரிமானம் மற்றும் குடல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

லேசான உணவுகளை எடுங்கள்:

மழைக்காலத்தில் இட்லி, இடியாப்பம் போன்ற லேசான உணவுகளை எடுத்து கொள்ளலாம். வறுத்த, காரமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ALSO READ: மழைக்காலத்தில் வரும் வைட்டமின் D குறைபாடு.. சரி செய்வது எப்படி?

தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள்:

மழைக்காலத்தில் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் உணவில் தயிர் போன்ற புரோபயாடிக்குகளைச் சேர்த்து கொள்வது நல்லது. மழைக்காலத்தில் தயிர் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களைக் கொன்று நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது வயிறு மற்றும் குடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. மேலும் துளசி, கிராம்பு, இஞ்சி, ஏலக்காய் போன்றவற்றைக் கொண்டு டீ குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், மழைக்கால நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.

8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?