Health Tips: உங்களுக்கு உணவுடன் டீ குடிக்க பிடிக்குமா..? ஏன் இந்த தவறை செய்யக்கூடாது?

Drinking Tea with Meal: உணவுக்கு பிறகு டீ குடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இது உங்கள் இதய துடிப்பை அதிகரித்து இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதேபோல், உணவுக்கு பிறகு டீ உட்கொள்வது வயிற்று புண்களை அதிகரிக்கக்கூடும்.

Health Tips: உங்களுக்கு உணவுடன் டீ குடிக்க பிடிக்குமா..? ஏன் இந்த தவறை செய்யக்கூடாது?

உணவுடன் டீ

Updated On: 

06 Oct 2025 14:57 PM

 IST

காலையில் டீ (Tea) இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. சிலர் உணவின் போது டீ குடிக்கும் பழக்கத்தைக் கூட கொண்டுள்ளனர். இதற்கு காரணம், நன்றாக சாப்பிட்டதும் (Meals) சிலருக்கு தூக்கம் வருவது போல் பிம்பம் ஏற்படும். எனவே, அவர்களின் தூக்கத்தை போக்குவதற்கு டீ குடிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால், உணவுக்கு பிறகு டீ குடிப்பது சிலருக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கும். சிலருக்கு ஒரு நாளைக்கு பல கப் டீ குடிக்க பிடிக்கும். இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுடன் டீ குடிக்கும் பழக்கம் நல்லதல்ல. இது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பிறகு ஏன் குடிக்கக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சாப்பிடும்போது ஏன் டீ குடிக்கக்கூடாது..?

டீயில் டானின்கள் எனப்படும் பாலிபினால்கள் உள்ளன, அவை உடல் இரும்பை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. சாப்பிடும் போது டீ குடிப்பதால் உடலின் இரும்பை உறிஞ்சும் திறன் 20 முதல் 70 சதவீதம் வரை குறைகிறது. எனவே, ஏற்கனவே உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், டீயானது உணவின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது. குறிப்பாக, சில தாதுக்களின் நன்மைகளை உடல் உறிஞ்சுவதில்லை. டானின்கள் உடல் துத்தநாகம் மற்றும் கால்சியத்தை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன.

ALSO READ: காலை உணவில் தவறாமல் இது இடம்பெறுமா..? இதய நோய் பிரச்சனை உண்டாகலாம்!

செரிமான பிரச்சனை:

சாப்பிடும்போது டீ குடிப்பதும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில சமயங்களில், காஃபின் மற்றும் டானின்கள் புரதங்களின் செரிமானத்தை துரிதப்படுத்தும். இது வீக்கம் மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். இருப்பினும், உணவு உண்ணும் போது பிளாக் அல்லது க்ரீன் டீ குடிப்பது சில நேரங்களில் நன்மை பயக்கும். உணவு சாப்பிட்ட பிறகு, உடலில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கிறது. டீ அந்த அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வெறும் வயிற்றில் டீ குடிப்பதற்கும் உணவுடன் டீ குடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. உணவுடன் டீ குடிப்பதால் பற்களில் கறை சற்று குறையும், ஏனெனில் உணவு பற்சிப்பியுடன் நேரடி தொடர்புக்கு வராது.

உணவுக்கு பிறகு டீ குடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இது உங்கள் இதய துடிப்பை அதிகரித்து இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதேபோல், உணவுக்கு பிறகு டீ உட்கொள்வது வயிற்று புண்களை அதிகரிக்கக்கூடும். உணவுக்கு பிறகு டீ குடிப்பது உங்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கிறது. இதனால், வயிற்று புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, உணவுக்கு பிறகு டீ மற்றும் காபியை தவிர்ப்பது நல்லது.

ALSO READ: மழைக்காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏன் ஏற்படுகிறது..? தடுப்பது எப்படி?

டீ எப்போது குடிப்பது நல்லது..?

எனவே உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மோசமடையாமல் இருக்க விரும்பினால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்களுக்குப் பிறகு டீ அருந்துங்கள்.