Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Eye Safety Tips: கண்களில் தூசி விழுந்தால் ஏன் கண்களை தேய்க்க கூடாது..? இவ்வளவு பிரச்சனையை தரும்!

Prevent Eye Damage: கண்களில் தூசி அல்லது துகள்கள் பட்டால், தேய்க்காமல் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கண்களைத் தேய்க்குவது கண் சேதத்திற்கு வழிவகுக்கும். சூரிய ஒளி, தூசி ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது, போதுமான நீர் அருந்துவது மற்றும் ஓய்வு அவசியம். கண் ஆரோக்கியம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Eye Safety Tips: கண்களில் தூசி விழுந்தால் ஏன் கண்களை தேய்க்க கூடாது..? இவ்வளவு பிரச்சனையை தரும்!
கண் எரிச்சல்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 02 Jul 2025 15:40 PM

பல சமயங்களில் வீட்டை சுத்தம் செய்யும்போதோ அல்லது சாலையில் வாகனம் ஓட்டும் போதோ, நம் கண்களுக்குள் தூசி அல்லது சிறிய துகள்கள் பட்டால், நாம் கண்களை சுருக்கி, கைகளால் கண்களை தேய்க்க தொடங்குகிறோம். ஆனால், இப்படி கண்களை தேய்ப்பது நல்லதல்ல, இது ஆபத்தானது. இப்படி நாம் செய்யும்போது நம் கண்களை என்றென்றும் சேதப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் பெரும்பாலும் நம் கண் பராமரிப்பை புறக்கணிக்கிறோம். அதேசமயம், நம் கண்களை நாம் கவனித்து கொள்ளாவிட்டால், நம் கண்கள் அடிக்கடி பிரச்சனையை சந்திக்க நேரிடும். நம் சருமத்துடன் சேர்ந்து நம் கண்களையும் நாம் கவனித்து கொள்ள வேண்டும். கடுமையான சூரிய ஒளி, தூளி மற்றும் துகள்கள் போன்றவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தநிலையில், கண்களை எப்படி பாதுகாப்பது, தூசி விழுந்தால் என்ன செய்வது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

கண்களில் தூசி விழுந்தால் என்ன செய்யக்கூடாது..?

  • கைகளில்தான் அதிக கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன. கண்களைத் தேய்க்கும்போது இந்த பாக்டீரியாக்கள் கண்களுக்குள் நுழையும் போது, ​​கண்கள் சேதமடைகின்றன. இதன் விளைவாக, கண்கள் தொடர்ந்து நீர் வடியத் தொடங்குகின்றன.
  • ஒருவருக்கு கண்கள் வறண்டு இருந்தால், அது மோசமடையக்கூடும். கண்களைத் தேய்ப்பதால் ‘ஹிஸ்டமைன்’ சுரப்பு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, கண்களில் அசௌகரியம் அதிகரிக்கிறது. கண்கள் அரிப்பு மற்றும் வீக்கமடைகின்றன.
  • கண்ணுக்குள் பல மென்மையான நரம்புகள் உள்ளன. கண்ணைத் தேய்ப்பது அந்த நரம்புகளை சேதப்படுத்தும்.
  • கண்களை அதிகமாக தேய்த்தால் கூட கண்களில் இரத்தப்போக்கு ஏற்படும்.

கண்களில் தூசி விழுந்தால் என்ன செய்யலாம்..?

உங்கள் கண்களில் ஏதாவது பட்டால், முதலில் குளிர்ந்த நீரில் கழுவவும். தேவைப்பட்டால், ட்ராப்ஸ் பயன்படுத்தி சிறிது நேரம் கண்களை மூடியிருங்கள். உங்கள் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கண்களை பாதுகாக்க என்ன செய்யலாம்..?

  • கோடை காலத்தில் வெளியே செல்லும் போதெல்லாம், சூரியனின் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க சன்கிளாஸ்கள் போன்றவற்றை அணியலாம். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்கும்.
  • அதிகமாக வியர்ப்பது உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவை குறைத்து, உங்கள் கண்களின் வறட்சியை ஏற்படுத்தும். எனவே, உங்கள் உடலும் கண்களும் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
  • கண்களை சுத்தமாக வைத்திருக்க குளிர்ந்த நீரில் கழுவவும். குளிர்ந்த நீரில் கண்களை கழுவுவது தூசி மற்றும் துகள்களை நீக்கி கண்களை குளிர்விக்கும். இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • கண்களை ஆரோக்கியமான வைத்திருக்க, 6 முதல் 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஏனெனில், அது கண்களுக்கு ஓய்வு தரும். போதுமான தூக்கம் இருப்பது கண்களுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.