சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? தடுக்க என்ன செய்ய வேண்டும்?
symptoms Of Kidney Failure : சிறுநீரகங்கள் நம் உடலில் கழிவுகளை அகற்றும் மகத்தான பணியை செய்கின்றன. அதில் பாதிப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்ட அறிகுறிகள் பெரிதாக இருக்காது. ஆனால் அவற்றை தெரிந்துகொண்டால் பெரும் பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்த கட்டுரையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதன் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்துகொள்வோம்.

மாதிரி புகைப்படம்
சிறுநீரகங்கள் (Kidney) நமது உடலில் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக இரத்தத்தை வடிகட்டுதல் மற்றும் நச்சுகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. சிறுநீரகத்தில் ஒரு பிரச்னை இருக்கும்போது, இந்த செயல்பாடுகள் தடைபடுகின்றன. இது முழு உடலையும் பாதிக்கிறது. ஒவ்வொருவரின் உடலிலும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும், அவை இரண்டும் சரியாக வேலை செய்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது அதன் அறிகுறிகள் உடனடியாக தெரியாது. சில நேரங்களில் இந்த அறிகுறிகளை எளிதில் அடையாளம் காண முடியாது. அறிகுறிகள் கடுமையாக இருக்கும்போது நோயாளிகள் மருத்துவரை நாடுகின்றனர். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அதன் பாதிப்புகள் குறையும். தாமதமாகக் கண்டறியப்பட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக முடியும்.
ஆரம்ப அறிகுறிகள்
சிறுநீரக செயலிழப்பின்போது ஆரம்பத்தில் சில அறிகுறிகள் தோன்றும், ஆனால் அது குறித்து போதிய புரிதல் இல்லாததால் பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறோம். இந்த அறிகுறிகளில் சிறுநீர் கழிக்கும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அடங்கும். இதனுடன், எப்போதும் சோர்வாக இருப்பதும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். சிறுநீரக செயலிழப்பின் தொடக்கத்தில் தோல் ஒவ்வாமை ஏற்படலாம். இந்த ஒவ்வாமை அரிப்பை ஏற்படுத்தும். அது எந்த இடத்திலும் ஏற்படலாம்.
இவை தவிர, உடலில் வீக்கம், பசியின்மை, சுவாசிப்பதில் சிரமம், தூங்குவதில் சிரமம், வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவையும் சிறுநீரக செயலிழப்பின்ல ஆரம்ப கட்ட அறிகுறிகளாகும்.
இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சிறுநீரக செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு உங்கள் அன்றாட வழக்கத்தை மாற்றவும். சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்பட்டால், அது உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்படும், எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தண்ணீர் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். சாப்பிடும்போதும் நீர் அருந்தும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் சிறுநீரகங்களைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை தொடங்கப்பட்டால், சிறுநீரகம் முழுமையாக பாதிக்காமல் தடுக்கலாம்.
சிறுநீரகங்களின் செயல்பாடு உடல் சரியாக வேலை செய்வதற்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக உடலில் கழிவுகளை அகற்றும் மகத்தான வேலையை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. ஆனால் சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்பட்டால் அதன் ஆரம்ப அறிகுறிகள் எளிதில் தெரியாது. மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)