Health Tips: கொலஸ்ட்ரால் நண்பனா எதிரியா..? பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப் விளக்கம்!

Cholesterol: கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் நல்ல கொழுப்பை (HDL) பராமரிக்கவும் சமச்சீர் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். அந்தவகையில், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலஸ்ட்ரால் உடலில் நண்பனா எதிரியா என்பதை தெரிந்து கொள்வோம்.

Health Tips: கொலஸ்ட்ரால் நண்பனா எதிரியா..? பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப் விளக்கம்!

மருத்துவர் சந்தோஷ் ஜேகப்

Published: 

08 Oct 2025 22:44 PM

 IST

உடலில் கொலஸ்ட்ரால் (Cholesterol) நண்பராகவும் எதிரியாகவும் இருக்கிறது. ஏனெனில் இது உடலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். உடலின் ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் பித்த அமிலங்களின் உற்பத்திக்கு கொலஸ்ட்ரால் அவசியம். இருப்பினும் இது உடலில் அதிக அளவில் அதிகரிக்கும்போது இதய நோய்க்கு வழிவகுக்கும். அதாவது, அதிக அளவில் சேரும் கெட்ட கொழுப்பு (LDL) தமனிகளில் குவிந்து அவற்றைச் சுருக்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் நல்ல கொழுப்பை (HDL) பராமரிக்கவும் சமச்சீர் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். அந்தவகையில், பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேகப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலஸ்ட்ரால் உடலில் நண்பனா எதிரியா என்பதை தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் நண்பனா எதிரியா..?

உடல் பருமன் வேகமாக அதிகரிப்பது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறியாகும். இது இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதிப்பது போல, உங்கள் கொழுப்பின் அளவையும் சரிபார்க்கவும். இது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் அட்ரீனல் ஹார்மோன்கள் போன்ற ஹார்மோன்களை உருவாக்க கொலஸ்ட்ரால் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ALSO READ: மாரடைப்பு வரும் என பயமா..? இந்த 4 பழங்கள் போதும்.. உங்கள் இதயத்தை பாதுகாக்கும்..!

மேலும், கொலஸ்ட்ராலானது எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி உற்பத்தியை தருகிறது. தொடர்ந்து, நல்ல கொலஸ்ட்ரால் உடலில் செல் சவ்வுகளின் கட்டமைப்பை உருவாக்கவும் பித்த அமிலங்களை உருவாக்கவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, நல்ல கொலஸ்ட்ரால் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்போது என்ன நடக்கும்..?


உடலில் கல்லீரல் தேவையான அளவு கொழுப்பை அதாவது 80 சதவீத கொழுப்பை உடலுக்கு உற்பத்தி செய்து கொடுக்கிறது. மீதமுள்ள 20 சதவீத கொழுப்பு நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கிறது. கல்லீரல் ஒரு கட்டத்திற்கு மேல் அளவை வெளியிடும்போது கெட்ட கொழுப்பானது தமனிகளில் குவிந்து, பாதிப்பை கொடுக்கும். இதனால், தமனிகள் குறுகும்போது இதயம் மற்றும் மூளைக்கு இரத்த விநியோகத்தை சீர்குலைத்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கொடுக்கிறது.

உடல் பருமன், சர்க்கரை, வறுத்த உணவுகள் மற்றும் துரித உணவுகள் போன்றவை உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

ALSO READ: இரவு வெகுநேரம் வேலை செய்யும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்படும் அபாயம்..!

என்ன செய்ய வேண்டும்?

நார்ச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன்மூலம், கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பு உற்பத்தியாக உதவும். மேலும், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், கண்டறியவும் அவ்வப்போது உங்கள் கொழுப்பை மருத்துவர் பரிந்துரையின் பேரில் பரிசோதிக்கவும். தொடர்ந்து, உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்க்கவும்.