Health Tips: மலச்சிக்கல் பிரச்சனையால் மன உளைச்சலா..? இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

Natural Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வு காணும் எளிய வழிமுறைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, திரிபலா பொடி, நெய், இசப்கோல் போன்ற பொருட்களின் பயன்பாடு மற்றும் பப்பாளி, ஆப்பிள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

Health Tips: மலச்சிக்கல் பிரச்சனையால் மன உளைச்சலா..? இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

மலச்சிக்கல்

Published: 

25 Jun 2025 13:26 PM

காலையில் எழுந்தவுடன் வயிற்றில் உள்ள கழிவுகளை முழுவதும் வெளியேற்றுவது முக்கியம். அவ்வாறு, வயிறு சுத்தமாக இல்லாவிட்டால், உடல் நலத்துடன் மனநலத்தையும் கெடுக்கும். இந்தப் பிரச்சனை சிறியதாகத் தோன்றினாலும், உடலளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பெயர் மலச்சிக்கல் (Constipation) என்று சொல்வார்கள். இன்றைய நவீன வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மன அழுத்தத்தால் பலரும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். பலரும் இதற்காக எவ்வளவோ மாத்திரை மற்றும் மருந்துகளை எடுத்துகொண்டாலும், பிரச்சனை தீர்வாகாது. பாட்டி வைத்தியத்தின்படி, எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை (Digestion) மேம்படுத்தக்கூடிய பல ரகசியங்கள் உள்ளன. இவை மலச்சிக்கலை நீக்குவது மட்டுமல்லாமல், வயிற்றை இலகுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

வெதுவெதுப்பான நீர் – எலுமிச்சை:

காலையில் வெறும் வயிற்றில் அரை எலுமிச்சை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வெதுவெதுப்பான நீரில் குடிப்பது மலச்சிக்கலில் இருந்து விடுபட எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி வயிற்றை சுத்தமாக வைத்திருக்க பெரிதும் உதவி செய்யும்.

திரிபலா பவுடர்:

திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று பொருட்களின் கலவையாகும். அதன்படி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது மலச்சிக்கலை குணப்படுத்தும். மேலும், இது குடலை ஆழமாக சுத்தப்படுத்தவும் உதவி செய்கிறது. இந்த ஆயுர்வேத செய்முறை செரிமான அமைப்பை பலப்படுத்தும்.

ஒரு ஸ்பூன் நெய்:

தினமும் இரவில் சூடான பாலில் ஒரு ஸ்பூன் தேசி நெய் கலந்து குடித்தால், குடல்கள் ஈரப்பதமாக இருக்கும், மலம் மென்மையாகும், இதனால் காலையில் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படும்.

இசப்கோல்:

இசப்கோல் உமியை சைலியம் உமி என்றும் சொல்வார்கள். இதை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்துவது மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். இசப்கோலில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இவை வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும். மேலும், இது குடல் இயக்க செயல்முறையை எளிதாக்கும்.

பப்பாளி மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள்:

பப்பாளி, ஆப்பிள், பீட்ரூட், கேரட் மற்றும் பச்சை இலை காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவும். இதனுடன், செரிமான அமைப்பை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

மலச்சிக்கல் என்பது சரியான நேரத்தில் குணப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சனை. இவரை சாதாரணமாக புறக்கணிக்கப்பட்டால், அது தலைவலி, வாய் துர்நாற்றம், தோல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, மருந்துகளை நம்புவதற்கு பதிலாக, இந்த பாட்டி முறை வைத்தியங்களான இவற்றை பயன்படுத்தினால், இயற்கையான முறையில் உங்கள் செரிமான சக்தி வலுப்படும்.