மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

Buying Health Insurance: மருத்துவக் காப்பீடு அவசர மருத்துவச் செலவுகளை குறைத்து நிதி பாதுகாப்பை வழங்குகிறது. பாலிசி எடுக்கும்போது அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம். மேலும், மருத்துவமனை தேர்வு மற்றும் கிளைம் செய்யும் வசதிகள் எளிதாக இருக்கிறதா என்பதும் முக்கியமான அம்சமாகும்.

மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

மருத்துவக் காப்பீடு

Published: 

01 Apr 2026 12:33 PM

 IST

ஒரு சாதாரண இருமல், சளி, காய்ச்சலுக்கே தனியார் மருத்துவர்களிடம் ரூ.1000 இல்லாமல் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், திடீரென ஏற்படும் மருத்துவ அவசரங்களுக்கு முன்கூட்டியே தயாராக இருப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. இதனால், மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்காதவர்கள் உடனடியாக அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிலர் தனிநபர் பாலிசியாகவும், சிலர் குடும்பத்திற்கான பாலிசியாகவும் தேர்வு செய்கிறார்கள்.

காத்திருப்புக் காலம் – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது, அனைத்து நோய்களுக்கும் உடனடி பாதுகாப்பு கிடைக்காது. சில சிகிச்சைகளுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். குறிப்பிட்ட சில நோய்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகே காப்பீடு மூலம் சிகிச்சை பெற முடியும். எனவே, இந்த பட்டியலை கவனமாக ஆய்வு செய்து பாலிசி தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

மருத்துவமனை அறை வாடகை – கூடுதல் செலவுகள் ஏற்படுமா?

சில காப்பீட்டு திட்டங்களில் மருத்துவமனை அறை வாடகைக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குறைந்த சதவிகிதம் மட்டுமே காப்பீடு வழங்கும் நிலையில், உயர்தர அறைகளை தேர்வு செய்தால் கூடுதல் செலவுகளை நாமே ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், பாலிசியின் விதிமுறைகளை முன்கூட்டியே புரிந்து கொள்ள வேண்டும்.

சிகிச்சை உள்-உச்ச வரம்புகள் – மறைமுக கட்டுப்பாடுகள்

சில மருத்துவக் காப்பீடுகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு தனித்தனி உள்-உச்ச வரம்புகள் இருக்கும். கண்புரை, இதய சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சைகளுக்கு கூட முழு செலவு கிடைக்காமல் இருக்கலாம். எனவே, இந்த வரம்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ளுவது அவசியம்.

மருத்துவமனை வலையமைப்பு – அருகிலுள்ள சேவைகள்

உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனத்தின் பட்டியலில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், முதலில் நாமே பணம் செலுத்தி பின்னர் திரும்ப பெற வேண்டிய நிலை ஏற்படும். இது அவசர காலங்களில் சிரமத்தை ஏற்படுத்தும்.

Also Read: காலை எழுந்தவுடன் நீர் அருந்துவதன் முக்கியத்துவம்..!

கிளைம் மற்றும் மறுபயன்பாடு – முக்கிய நன்மைகள்

சிகிச்சைக்குப் பிறகு பணத்தை திரும்ப பெறும் போது அதிகபட்ச தொகையை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வது நல்லது. மேலும், ஒரே ஆண்டில் ஒரு முறை முழுத் தொகை பயன்படுத்திய பிறகும் மீண்டும் காப்பீடு பெறும் வசதி சில பாலிசிகளில் இருக்கும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் பலமுறை சிகிச்சை தேவைப்படும் சூழலில் இது உதவியாக இருக்கும்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..