Kenatha kanom Review: தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்.. யோகி பாபுவின் கெணத்த காணோம் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Friday Theater Releases: யோகி பாபு மற்றும் மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்த படம்தான் கெணத்த காணோம். இப்படம் இன்று 2026 மார்ச் 13ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதையில் வெளியாகியுள்ள இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Kenatha kanom Review: தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்.. யோகி பாபுவின் கெணத்த காணோம் படம் எப்படி இருக்கு? - விமர்சனங்கள் இதோ!

கெணத்த காணோம் பட விமர்சனங்கள்

Updated On: 

13 Mar 2026 12:41 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் கமெண்டியனாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் யோகி பாபு (Yogi Babu). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கிய நிலையில், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்த வரிசையில் இவரின் நடிப்பில் புதிதாக தயாராகியுள்ள படம்தான் “கெணத்த காணோம்” (Kenatha Kanom). இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா (Suresh Sangaiah) எழுதி இயக்கியுள்ளார். இவர் இந்த படத்தின் இறுதியிலே உடல்நல குறைவால் இறந்த நிலையில், மற்றொரு இயக்குநரால் இப்படமானது முழுவதுமாக முடிக்கப்பட்டிருந்தது. இதை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா (Nivas K. Prasanna) இசையமைத்துள்ளார்.

இதில் யோகி பாபுவுடன் நடிகர்கள் லவ்லின் சந்த், ரேச்சல் பேபிகா, ரமா கிருஷ்ணன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது இன்று 2026 மார்ச் 13ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய அனுஷ்கா ஷெட்டி.. யாரை திருமணம் செய்கிறார் தெரியுமா?

கெணத்த காணோம் திரைப்படம் எப்படி இருக்கு:

இந்த கெணத்த காணோம் படத்தின் கதையை மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா சிறப்பாகவே எழுதியுள்ளார். மேலும் இதில் நடிகர்களுக்கான தேர்வும் சரியாக உள்ளது என்று கூறலாம். தண்ணீருக்காக தவிக்கும் ஒரு கிராமம் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கிணறு வெட்டுகிறது, ஆனால் அதில் வேறு ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. இந்த விஷமானது மிகவும் நகைச்சுவையுடன் கையாளப்பட்டுள்ளது. இதில் நடிகர் யோகி பாபுவைச் சுற்றி பல துணை கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

இப்படத்தில் ஏராளமான வேடிக்கையான காட்சிகள் உள்ளன, சத்தமாக சிரிக்க வைக்கும் தருணங்களாக இல்லாவிட்டாலும், ஒரு சமூக கருத்தை சொல்லும் படமாகவே இது இருக்கிறது. யோகி பாபுவுக்கு இது ஒரு அருமையான படமாக அமைத்துள்ளது. தாய் கிழவி படத்திற்கு பின் ரேச்சல் ரெபேக்கா மீண்டும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்கிறார்.

கெணத்த காணோம் படம் குறித்து யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கெணத்த காணோம் படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா? :

கிடாயின் கருணை மனு மற்றும் சத்ய சோதனை படத்திற்கு பிறகு, இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் வேடிக்கையான கருத்தைக் கொண்ட படமாக கெணத்த காணோம் படம் அமைந்துள்ளது. தாய் கிழவி படத்திற்கு பின் மற்றொரு உண்மையான கிராமப்புற பொழுதுபோக்கு படமாக இது அமைந்துள்ளது. இப்படமானது பேமிலியாக திரையரங்கு சென்று பார்ப்பதற்கு நல்ல படம்தான். காமெடி, எமோஷனல் மற்றும் வித்தியாசமான கதையை பார்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக இதை தியேட்டர்கள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..