Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தை நிரப்பும் அடுத்த நடிகர் யார்? அந்த நடிகருக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு?

Who Will Replace Vijay In Kollywood: கோலிவுட் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் வரிசையில் முன்னணி உச்ச நட்சத்திரமாக இருந்து, அதிக வசூல் படங்களை கொடுத்துவந்தவர்தான் விஜய். இவர் தற்போது முழுமையாக தமிழக அரசியலில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரின் இடத்தை தமிழ் சினிமாவில் யார் நிரப்புவார் என கேள்வி எழும்பியுள்ளது.

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தை நிரப்பும் அடுத்த நடிகர் யார்? அந்த நடிகருக்குதான் அதிக வாய்ப்பு இருக்கு?

பணநாயகம் ஆழ குழி தோண்டி புதைக்கப்பட்டது

Updated On: 

05 May 2026 19:56 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்ற நடிகராக இருந்துவந்தவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 69 திரைப்படங்கள் உருவாகியிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியிருந்தார். தனது கடைசி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படத்தை அறிவித்திருந்த நிலையில், இன்னும் அந்த படமானது திரையரங்குகளில் வெளியாகாமலே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்றிருந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தளபதி விஜய்யின் தவெக கட்சியானது அதிக வாக்குகளை பெற்று வெற்றியை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தளபதி விஜய், வரும் 2026 மே 7ம் தேதியில் தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

இந்நிலையில் இவர் முழுமையாக சினிமாவிலிருந்து விலகியுள்ள நிலையில், அடுத்ததாக படங்களில் நடிக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தளபதி விஜய்யின் இடத்தை தமிழ் சினிமாவில் அடுத்து நிரப்பப்போகும் நடிகர் யார் என ரசிகர்களிடையே கேள்விகள் எழுந்துவருகிறது.

இதையும் படிங்க: தனுஷின் 55-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ

தளபதி விஜய்யின் முதல்வர் பதவியேற்பு குறித்து வைரலாகும் பதிவு:

தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தை பிடிக்க போராடும் நடிகர்கள் :

தற்போது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே உச்ச நடிகர்களாக இருந்துவந்தாலும், அவர்களின் படங்களுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் ரசிகர்கள் பெரிதாக இருப்பதுபோல இல்லை. தற்போது விஜய்யின் இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு நடிகர்களும் மறைமுகமாக போட்டியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய்க்கு அடுத்ததாக இருந்துவந்த அஜித் குமாரும் கார் ரேஸில் இறங்கிய நிலையில், ஆண்டுக்கு 1 படம் என்ற விதத்திலே படங்களை நடிப்பார்.

இதையும் படிங்க: பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.செளத்ரி சாலை விபத்தில் காலமானார்

இந்நிலையில் சூர்யாவும் தற்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதே சமையத்தில் இளம் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்துவருபவர்கள் சிலம்பரசன், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். அதிலும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மேலும் அல்லு அர்ஜுனும் தமிழில் படங்களில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அந்த வகையில் விஜய்யின் இடத்திற்கு தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதில் யார் விஜய்யின் இடத்தை கோலிவுட் சினிமாவில் நிரப்புவார் என்பதை காலமும், ரசிகர்களும் முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..