Vishnu Vishal : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

Vishnu Vishal About Cinema Struggles : பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல பணிகளைச் செய்து வருகிறார். இவர் தனது முதல் படத்தில் ரிஜெக்ட் ஆனது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Vishnu Vishal : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

நடிகர் விஷ்ணு விஷால்

Published: 

09 Jul 2025 16:00 PM

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal ) நடிப்பிலிறுதியாக வெளியான திரைப்படம் லால் சலாம் (Lal Salam). இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், ரஜினிகாந்த் (Rajinikanth) சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில், இரண்டு வானம், மோகன்தாஸ், ஆர்யன் என பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது தம்பியையும் நடிகராக, ஓஹோ எந்தன் பேபி (Oho Enthan baby) என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்திலும் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பேசிய அவர் சினிமாவில் ஆரம்பத்தில் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் முதலில் நடிக்கவிருந்த படம் பற்றியும் ஓபனாக பேசியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகர் விஷ்ணு விஷால் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், நான் சினிமாவில் அறிமுகமாக்குவதற்கு முன் எப்போதும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில்தான் எப்போது இருப்பேன். உண்மையைச் சொல்லப் போனால் நான் முதலில் நடிக்கவேண்டிய திரைப்படம் நான். நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அந்த படம் அதன் பிறகு வெளியானது. அந்த படத்தில்தான் நான் முதன் முதலில் நடிக்கவேண்டிய திரைப்படம்.

இதையும் படிங்க :கோலமாவு கோகிலா படத்தில் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. யோகி பாபு சொன்ன சம்பவம்!

அந்த படத்தில் நடிப்பதற்காக என்னை தேர்ந்தெடுத்து, அந்த படத்திற்காக எனது உடலையும் தயார் செய்திருந்தேன். அந்த படத்தில் இருந்து என்னை எதற்காக நீக்கினார்கள் என எனக்குத் தெரியவில்லை. திடீரென எந்த காரணமும் இல்லாமல் என்னை தூக்கி விட்டார்கள், அதன் பின் ஆஸ்கார் ரவிசத்சந்திரனின் அலுவலகத்திற்குச் சென்று நான் அவரிடம் , “நீங்கள் என்னை நீக்கி,  மிகவும் கஷ்டப்படுத்திவிட்டீர்கள் என நான் கூறினேன்.

இதையும் படிங்க :நீங்க இல்லனா.. விஜய்யை பற்றி பிக் பாஸ் ராஜு நெகிழ்ச்சி

அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது, அதன் பிறகு நான் சினிமாவே வேண்டாம் என இருந்தேன். நான் படித்திருக்கிறேன். அதற்குண்டான வேலையை பார்க்கவேண்டும் என நினைத்தேன். அதைப்போல வேலை ஒன்றிலும் பணியாற்றினேன்” என நடிகர் விஷ்ணு விஷால் உருக்கமாகப் பேசியிருந்தார்.