ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!

Funny Moment on Hi Movie set: பான் இந்திய சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்தும் தற்போதும் கதாநாயகியாக நடித்துவருபவர் நயன்தாரா. இவர் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த காமெடியான விஷயம் குறித்து விஷ்ணு எடவன் பகிர்ந்துள்ளார்.

ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? - இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!

நயன்தாரா மற்றும் கவின்

Updated On: 

05 Apr 2026 11:00 AM

 IST

நடிகை நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல், திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் இவரின் கையிருப்பில் கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் உள்ளது. இந்த படங்களில் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்கத்தில், இவர் நடித்துள்ள படம்தான் ஹாய் (Hi). இந்த படத்தில் நயன்தாரா லீட் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) நடித்துள்ளார். இந்த படமானது பீல் குட் காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேத்திரிக்கை பேட்டி ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் விஷ்ணு எடவன், ஹாய் பட முதல் நாள் ஷூட்டிங்கில் நயன்தாரா மற்றும் கவினுக்கும் இடையே நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் – கிரித்தி ஷெட்டி

ஹாய் பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவையான தருணம் குறித்து விஷ்ணு எடவன் பேச்சு:

அதில் இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில், “நயன்தாரா மேடம் தயாரிப்பில், கவின் நடிப்பில் ஊர்க்குருவி என்ற படம் ஒன்று திட்டமிடப்பட்டது. அந்த நாளிலிருந்தே நயன்தாரா மேடமிற்கு கவினை நன்கு தெரியும். அந்த வகையில் ஹாய் பட ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே, கவின் நயன்தாராவைக் கட்டிப்பிடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. அப்போது கவின் அதைப் பற்றிச் சற்றுத் தயங்கினார்.

இதையும் படிங்க: லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ட்ரெய்லர்!

உடனே, நயன்தாரா மேடம், “நீ இதற்கு முன் யாரையும் கட்டிப்பிடித்ததில்லையா?” என்று கேட்டு அவரைக் கிண்டல் செய்தார். படப்பிடிப்புத் தளத்தில், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போதெல்லாம், வேடிக்கையும் சிரிப்பும் நிறைந்திருக்கும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஹாய் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஹாய் படமானது முழுக்க பீல் குட் திரைப்படமாக உருவாகிவருகிறதாம். இந்த படம் நயன்தாரா மற்றும் கவினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. ஆனாலும் இன்னும் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை.

Follow Us
Related Stories
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்