Vishal : ‘விஷால்35’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் துஷாரா விஜயன்!
Vishal35 Movie Shooting Pooja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா படம் வெளியாகியிருந்த நிலையில், அடுத்ததாக இயக்குநர் ரவி அரசின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜை 2025, ஜூலை 14ம் தேதியான இன்று நடைபெற்ற நிலையில், விஷால் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

விஷாலின் 35வது படத்தின் பூஜை
நடிகர் விஷாலின் (Vishal) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மத கஜ ராஜா (Madha Gaja Raja). இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கியிருந்தார். சுமார் 12 வருடங்களுக்கும் முன் உருவான இப்படமானது, இந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. சுமார் 12 வருடங்களுக்குப் பின் இப்படம் வெளியாகியிருந்தாலும் எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் விஷால் புதிய படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் ரவி அரசு (Ravi Arasu) இயக்கத்தில் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குநர் ரவி அரசு ஏற்கனவே, ஈட்டி மற்றும் ஐங்கரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக விஷாலின் 35வது படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் இன்று 2025, ஜூலை 14ம் தேதியில் நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் கார்த்தி (Karthi) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க : வேட்டுவம் பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.. வெளியான விபத்து வீடியோ!
நடிகர் விஷால் வெளியிட்ட விஷால்35 பட பூஜை புகைப்படங்கள் :
And here we go, finally after the grand success of #MadhaGajaRaja, starting my next film #vishal35 under the production of @SuperGoodFilms_ produced by #RBchoudhary sir marking their 99th film directed by @dir_raviarasu It’s our first collaboration. Sharing screen space with me… pic.twitter.com/fxM5meY7hc
— Vishal (@VishalKOfficial) July 14, 2025
நடிகர் விஷாலின் 35வது திரைப்படம் :
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் இன்று 2025, ஜூலை 14ம் தேதியில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த புதிய படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார். இவர் கடந்த 2025 , மார்ச் மாதத்தில் வெளியான வீர தீர சூரன் 2 படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தை அடுத்தது விஷாலுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் ஜீவா இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க : தலைவன் தலைவி படம் ஒரு உண்மை கதை – இயக்குநர் பாண்டிராஜ்!
இது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 99வது திரைப்படமாக உருவாக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளாராம்.
விஷால்35 பட ஷூட்டிங் எப்போது ஆரம்பம் :
விஷாலின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடிக்கும் நிலையில், மேலும் நடிகர் அர்ஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் படக்குழு வெளியிட்ட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.