16 ஆண்டுகளைக் கடந்த கந்தசாமி படத்தினை எங்கு பார்க்கலாம் தெரியுமா?

15 Years Of Kanthaswamy Movie: தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் சியான் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான கந்தசாமி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

16 ஆண்டுகளைக் கடந்த கந்தசாமி படத்தினை எங்கு பார்க்கலாம் தெரியுமா?

கந்தசாமி

Published: 

21 Aug 2025 21:33 PM

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கந்தசாமி. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது 16 வருடங்களைக் கடந்துள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுசி கணேஷன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரியா சரண் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரபு, ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, கிருஷ்ணா, வடிவேலு, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், சுசி கணேசன், அலெக்ஸ், கிங் காங், இளவரசு, நெல்லை சிவா, வினோத் ராஜ், அல்வா வாசு, முத்துகாளை, மயில்சாமி, சார்லி செல்லதுரை, முமைத் கான் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் கந்தசாமி படத்தின் கதை என்ன?

கந்தசாமி படத்தில் சிபிஐ ஆபிசராக நடிகர் விக்ரம் நடித்து இருந்தார். இதில் வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி உட்பட பல வில்லன்கள் செய்துள்ள ஊழல்களை கண்டுபிடிக்கும் நபராக நடிகர் விக்ரம் இருப்பார். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி மகளாக நடிகை ஷ்ரியா சரண் நடித்து இருப்பார். தனது அப்பாவை எதிர்க்கும் விக்ரமை காதல் வலையில் விழவைத்து ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கும் அவர் நிஜமாகவே விக்ரமை காதலிக்க தொடங்கி விடுவார்.

இந்த நிலையில் சிபிஐயாக இருக்கும் விக்ரம் பணத்தை ஊழல் செய்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து கொள்ளையடித்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவார். அதற்கு அவர் கந்தசாமி என்ற சாமியை துணைக்கு வைத்து இருப்பார். கந்தசாமி கோவிலில் தனது கஷ்டத்தை எழுதும் மக்களுக்கு அவர்களுக்கு உதவும் விதமாக விக்ரம் தொடர்ந்து உதவுவார். சிபிஐ அதிகாரியாக இருந்து இப்படி செய்யும் விக்ரம் இறுதியில் மாட்டினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

Also Read… தீபாவளி ரிலீஸை உறுதி செய்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!