பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!

Priyanka Deshpande Birthday: தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில், தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், பாடகியாக புதிய பாடலை பாடியிருப்பதாக பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

பர்த்டே ஸ்பெஷல்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே

Updated On: 

28 Apr 2026 19:13 PM

 IST

தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தொகுப்பாளினியாக இருந்துவருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே (Priyanka Deshpande). இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக (Host) பணியாற்றிவருகிறார். சூப்பர் சிங்கர் (Super Singer) முதல், ஸ்டார்ட் மியூசிக், ஹேப்பி வைப் ஹேப்பி லைஃப் (Happy wife Happy Life) என பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றிவருகிறார். இது மட்டுமில்லாமல், பல படங்களில் இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக பிரியங்கா தேஷ்பாண்டே இருந்துவருகிறார்.

இவர் இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில் தனது 34வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், அவரின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் புதியதாக பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும், அதை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நானி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ‘தி பாரடைஸ்’ படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் புதிய பாடல் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு:

பிரியங்கா தேஷ்பாண்டே ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், அவ்வப்போது பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டிருந்தார். அந்த வகையில் முழுவதுமாக அவரின் குரலிலே ஒரு பாடலை தற்போது பாடியுள்ளார். வயசாகுதே என்ற வரியில் தொடங்கும், இந்தனை புதிய பாடலை, இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இதை முழுவதுமாக பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள நிலையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடலின் வரிகளை எழுத, விஜய் விக்கி என்பவர் இசையமைத்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்

வயசாகுதே பாடலின் வீடியோ பதிவு:

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, கடந்த 2025ம் ஆண்டில் பிரபல தொழிலாளிதிபர் வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் முடிந்த 1 ஆண்டான நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தனர். இது தொடர்பான பதிவை பிரியங்கா வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் ஸ்பெஷல் ஜோடியாகவே இவர்கள் இருவரும் இருந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவர் தன்னை பாடகியாகவும் அறிமுகபடித்திருக்கும் நிலையில், அவரின் முதல் பாடல் வசாகுதே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Follow Us
Related Stories
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..