தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Thalaivan Thalaivii - Release Date | நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

தலைவன் தலைவி
நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நாயகனாக நடிதுள்ள படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இந்த தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு (Actor Yogi Babu), செம்பன் வினோத் ஜோஸ், சரவணன், காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினி, தீபா, ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படம் குறித்த அப்டேட்களும் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக மாற்றும் வகையில் படக்குழு தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட்:
Welcome you all to Hotel Raghavardhini 🫶 Thalaivan Thalaivii worldwide from July 25 💥 @VijaySethuOffl @MenenNithya @SathyaJyothi @pandiraaj_dir @iYogiBabu @Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh @Roshni_offl @kaaliactor pic.twitter.com/C0ljoKQ24P
— Sathya Jyothi Films (@SathyaJyothi) June 29, 2025
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக இந்த தலைவன் தலைவி படத்தை தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதால தலைவன் தலைவி படத்தில் இருந்து வெளியான பொட்டல மூட்டையே என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படத்தின் ரிலீஸ் டீசரும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த டீசரில் படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திரங்களும் அறிமுகப்படுத்தியுள்ளது படக்குழு.