விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Thalaivan Thalaivi Movie: நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் பாண்டிராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

தலைவன் தலைவி

Updated On: 

08 Jun 2025 10:48 AM

தமிழ் சினிமாவில் நாயகன் மற்றும் வில்லன் என எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). கோலிவுட் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா சினிமா வரை நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நாயகனாக நடிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே ரசிகர்களின் பட்டாளத்தை பெரியதாக மாற்றினார் நடிகர் விஜய் சேதுபதி. நாயகனாக நடித்தால் மட்டும் அல்ல இவர் வில்லனாக நடித்தாலும் ரசிகர்களை அதனை கொண்டாடித் தீர்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஏஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது கலைவயன விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி – நித்யா மேனன் கூட்டணி:

இந்த நிலையில் ஏஸ் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்கு தலைவன் தலைவி என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, தீபா என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தலைவன் தலைவி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்:

படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தில் இருந்து பொட்டல மிட்டாய் எனற முதல் பாடல் வீடியோ வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்
ஜன நாயகன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்தது இதுதான் – நடிகர் டீஜே சொன்ன விசயம்