Bigg Boss Season 9: ஒண்ணுமே புரியலை.. வைரலாகும் பிக்பாஸ் சீசன் 9 ப்ரோமோ!
Bigg Boss Tamil Season 9 Promo : தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் வெளியாகவும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இது தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 2025ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி ஆரம்பமாகும் நிலையில், வித்தியாசமான ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகி வருகிறது. முதல் சீசன் முதல் 7 சீசன்கள் வரை கமல் ஹாசன் (Kamal Haasan) தொகுத்திருந்தார். மேலும் பிக்பாஸ் ஒரு நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசனும் (Silambarasan) தொகுத்திருந்தார். இதை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 8 முதல், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்க தொடங்கியுள்ளார். மேலும் இந்த 2025ம் ஆண்டு ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 9-னையும் (Bigg Boss Tamil season 9) விஜய் சேதுபதி தான் தொகுக்கவுள்ளார். மேலும் மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் 9 நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதை நிஜமாகும் விதத்தில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த ப்ரோமோ வீடியோவில் விஜய் சேதுபதி பல்வேறு கோணங்களில் போட்டியாளர்களின் மனநிலை குறித்து பேசுவது போன்றும், மாறுபட்டு இந்த வீடியோ உள்ளது. இதிலிருந்து தெரிகிறது மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று. இது தற்போது இணையத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பட்டியல்!
இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் சீசன் 9 ப்ரோமோ வீடியோ பதிவு :
ஒண்ணுமே புரியலையே..🎶🎵
Bigg Boss Tamil Season 9 – பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்..😀 விரைவில் நம்ம விஜய் டிவில.#BiggBossTamil #BiggBoss #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBoss9 #BB9 #BBT #VijayTV #VijayTelevision pic.twitter.com/f1R113QW6T
— Vijay Television (@vijaytelevision) September 5, 2025
பிக்பாஸ் சீசன் 9 தமிழின் போட்டியார்கள் லிஸ்ட் :
பிக்பாஸ் சீசன் 9 தமிழின் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் இணையதளங்கள் முழுவதும் பரவி வருகிறது. அந்த விதத்தில் மற்ற சீசன்களை ஒப்பிடும்போது, இந்த சீசன் 9 மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரபலங்களான புவி அரசு, ஷபானா, பாலா சரவணன், லக்ஷ்மி ப்ரியா, ஃபரீனா ஆசாத் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஸ் கிருஷ்ணா போன்ற பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது குறிதான தகவல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷனை தவிர யாரும் அந்த வேடத்தில் நடிக்கமுடியாது – துல்கர் சல்மான் பேச்சு!
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் எப்போது ஆரம்பம் :
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியையும் நடிகர் விஜய் சேதுபதிதான் தொகுக்கவுள்ளார். இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியையும் தொகுத்திருந்த நிலையில், இது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 19 மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.