மணிரத்னம் உடனான படத்தை உறுதி செய்த நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi confirms Maniratnam Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் உடன் கூட்டணி வைப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில் அதனை விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார்.

மணிரத்னம் உடனான படத்தை உறுதி செய்த நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - மணிரத்னம்

Published: 

24 Feb 2026 15:44 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன்படி இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பலப் படங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து நாயகனாக மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுக்கு எதிராக வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காந்தி டால்க்ஸ். இந்தப் படம் மௌனப் படமாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணிரத்னம் உடனான படத்தை உறுதி செய்த நடிகர் விஜய் சேதுபதி:

நான் மணி சாருடன் 2018-ல் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் பணியாற்றியுள்ளேன். இந்த முறை நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்வோம். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். சிறிய வேடங்களைத் தேடித் திரையுலகில் நுழைந்த விஜய் சேதுபதி இன்னும் உயிருடன் இருக்கிறார். மணிரத்னத்துடன் பணிபுரிந்தாலும் நான் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இதுக்கு இல்லையா ஒரு எண்ட்… மீண்டும் தள்ளிப்போகும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ்?

இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு:

Also Read… குக் வித் கோமாளி ரசிகர்களை தயாரா? ‘குக் வித் கோமாளி சீசன் 7ல்’ எல்லாமே புதுசு!

அமெரிக்காவில் 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேமராவில் சிக்கிய அரிய வகை ஃபயர் டைகர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி