Vijay Sethupathi : என்மீது தவறு இருந்தால் சொல்லுங்கள்… மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathi About Negative Criticism : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கில் புதிய படம் உருவாகி வருகிறது. சமீப காலமாக தன் மீதும், தனது மகன் மீதும் எழும் விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி மனம்திறந்து பேசியுள்ளார்.

Vijay Sethupathi : என்மீது தவறு இருந்தால் சொல்லுங்கள்... மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

Published: 

23 Aug 2025 15:30 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay sethupathi) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் தலைவன் தலைவி. (Thalaivan Thalavii) இந்த படமானது முற்றிலும் ஃபேமிலி எண்டர்டெயினர் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நித்யா மேனன் (Nithya Menen) இணைந்து நடித்திருந்தார். இந்த தலைவன் தலைவி படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இப்படமானது சுமார் ரூ. 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இதை அடுத்து விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, தனது மகன் மற்றும் தன்மீது எழும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அதில், ‘ என்மீது ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள், அடுத்த படத்தில் திருத்திவிடுகிறேன்” என பேசியிருக்கிறார். மேலும் அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : தீபாவளிக்கு ரிலீஸாகும் 2 படங்கள்.. கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதன்!

விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி :

நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி , விமர்சனங்கள் குறித்தும், தன்மீது எழும் தவறான கருத்துக்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர், ” எல்லா இடங்களிலும் நெகடிவ் விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை எப்படி கையாள்வது என்பதை, கற்றுகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. மேலும் நான் தவறு செய்தால், இப்படி செய்துவிட்டேனே ? என யோசிப்பதை விட.., அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை யோசிக்கிறேன்.

இதையும் படிங்க : மலையாள சினிமாவில் ஒரு ஜாதி ஜாதகம் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

நான் எனது ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். என் மீது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், அடுத்த படத்தில் திருத்திக்கொள்வேன். எனது ரசிகர்களின் மனநிலைதான் எனக்கு மிகவும் முக்கியம்” என நடிகர் விஜய் சேதுபதி ஓபனாக பேசியிருக்கிறார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி :

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இப்படம் கடந்த 2025, ஜூலை 25 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இதை தொடர்ந்து, இப்படமானது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் கடந்த 2025, ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியிருக்கிறது. தற்போது இப்படமானது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.