ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய் – வைரலாகும் வீடியோ
Jana Nayagan Movie Audio Launch: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜய் இன்று மலேசியாவிற்கு புறப்பட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய்
தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழகத்தில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஜன நாயகன் படம் தான் இறுதியாக நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்ற செய்தி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் தொடர்ந்து இந்த ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் இன்று மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா புறப்பட்ட விஜய்:
இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் இன்று சென்னையில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#ThalapathyVijay at Chennai airport..💥 Off to Malaysia for Grand #JanaNayagan Audio Launch..🤩 Waiting for his Speech..❣️pic.twitter.com/kwLDoENGs9
— Laxmi Kanth (@iammoviebuff007) December 26, 2025
Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை