டிவிகே டிவிகே என வந்த சத்தம்… இங்க வேணாம் நண்பா…. ரசிகர்களை கட்டுப்படுத்திய விஜய்
Jananayagan Audio Launch: விஜய்யின் கடைசி படமான ஜனநயாகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாகந நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் தவெக என சத்தமிட அவர்களை தன் ஸ்டைலில் விஜய் அமைதிப்படுத்தினார்.

தளபதி விஜய்
நடிகர் விஜய் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், ஜனநாயகன் (Jananayagan) தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்தப் படம் வருகிற ஜனவரி 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தளபதி திருவிழா என்ற பெயரில் டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் அட்லி, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தவெக என சத்தமிட்ட விஜய் ரசிகர்கள்
இந்த விழாவில் நடிகர் விஜய் கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து பின்னணியில் ஒரு பெயரே வரலாறு பாடல் ஒலிக்க இசை வெளியீட்டு விழா மேடைக்கு மாஸாக எண்ட்ரி கொடுத்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் தவெக தவெக என உறற்சாகத்தில் சத்தமிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், அவர்களை தன் ஸ்டைலில் இங்க வேணாம் என்பது போல கையைசைத்து அமைதிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க : Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!
வைரலாகும் வீடியோ
Whole crowd ” TVK.. TVK….TVK…”
Anna : Inga Vendam,.. Inga Vendam.. nanba, Signal to Stop 🤩#JanaNayaganAudioLaunch #ThalapathyThiruvizha pic.twitter.com/8MPcJFgtjS
— Tamil Nadu Vijay Fans Club (@TNVFC_OFFI) December 27, 2025
பகவந்த் கேசரி ரீமேக்கா?
ஜனநாயகன் திரைப்படத்தை பிரபல கோலிவுட் இயக்குநர் வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சில பகுதிகள் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வெளியான பாடல்கள், கிளிம்ஸ் காட்சிகள் எல்லாம் படம் முழுக்க பகவந்த் கேசரி ரீமேக்கா இருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : கேரளாவில் ஜன நாயகன் படத்தின் FDFS எப்போது தொடங்குகிறது தெரியுமா? வைரலாகும் தகவல்
குறிப்பாக சமீபத்தில் விஜய் குரலில் வெளியான செல்ல மகளே பாடல் காட்சிகள் அப்படியே பகவந்த் கேசரி பாடலில் உள்ளது போல இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இயக்குநர் எச்.வினோத் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, யோகி பாபு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், சத்யன் சூரியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.