Vijay Antony: சிவகார்த்திகேயன் படத்துடன் நேரடி மோதல் – விஜய் ஆண்டனி சம்பவம்!
Madharasi And Shakthi Thirumagan Clash : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் சக்தி திருமகன். இந்த படமானது, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்துடன் ஒன்றாக மோதவுள்ளது. இதன் ரிலீஸ் தேதி எப்போது எனப் பார்க்கலாம்.

சக்தி திருமகன் மற்றும் மதராஸி
நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony), தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார். மேலும் இயக்குநராகவும் படங்களை இயக்கியுள்ளார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மார்கன் (Maargan). இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை அடுத்ததாக அவர் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 6 திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அதில் ஒன்றுதான் சக்தி திருமகன் (Shakthi Thirumagan ). இந்த படத்தைத் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் (Arun Prabhu Purushothaman) இயக்கியுள்ளார். இந்த படமானது விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படமாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட வேலையிலிருந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி வெளியிட்ட சக்தி திருமகன் பட ரிலீஸ் தேதி :
#ShakthiThirumagan & #Bhadrakaali releasing worldwide on Sep 05 🔱#VA25 #ShakthiThirumaganfromSep05 ⛓️💥#BhadrakaalifromSep05 ⛓️💥@ArunPrabu_ @TruptiRavi58094 #SunilKirpalani @vijayantonyfilm pic.twitter.com/0FxbLD1D2k
— vijayantony (@vijayantony) July 10, 2025
சிவகார்த்திகேயனின் மதராசியுடன் மோதும் சக்தி திருமகன் :
விஜய் ஆண்டனியின் இந்த சக்தி திருமகன் படம் வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், அன்றுதான் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும் வெளியாகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாகும். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த நடித்துள்ளார்.
இதையும் படிங்க :தனுஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2025, செப்டம்பர் 05ம் தேதியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கும், விஜய் ஆண்டனியின் படத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு திரைப்படங்களும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் :
இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். இந்த திரைப்படமானது முழுக்க அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :அந்த ஹாலிவுட் வெப் தொடரின் ரீமேக்கில் நடிக்க ஆசை.. நடிகை பிரியாமணி பேச்சு!
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை த்ருப்தி ரவீந்திரன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.