விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் இருந்து முதல் 6 நிமிட காட்சிகள் நாளை வெளியீடு!

Actor Vijay Antony Margan Movie: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மார்கன். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் தற்போது மார்கன் படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பு ஒன்று ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் இருந்து முதல் 6 நிமிட காட்சிகள் நாளை வெளியீடு!

விஜய் ஆண்டனி

Published: 

24 Jun 2025 14:26 PM

இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என தமிழ் சினிமாவில் ரவுண்டுகட்டி வலம் வருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). தொடர்ந்து படங்களில் நடிப்பது, இசையமைப்பது மற்றும் தயாரிப்பது என பிசியாக இருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ளப் படம் மார்கன் (Margan Movie). இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் படங்களில் வரத்து அதிகமாக காணப்படுகின்றது. அந்த வரிசையில் தற்போது மார்கன் படமும் இணைந்துள்ளது மார்கன் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரியவந்தது. மேலும் படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

மார்கன் படக்குழு ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்:

இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு ஒன்றை நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தில் இருந்து முதல் 6 நிமிட காட்சிகளை நாளை படக்குழு வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு புது படத்திற்கும் படக்குழு வித்யாசமான முறையில் புரமோஷன் செய்துவரும் நிலையில் மார்கன் படம் இப்படி ஒரு புரமோஷன் செய்வது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கன் படம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் பட ட்ரெய்லர்:

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் படத்தின் ட்ரெய்லர் மே மாதம் 26-ம் தேதி 2025-ம் அண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ள நிலையில் நடிகர்கள் சமுத்திரக்கனி, அஜய் திஷன், பிரிஜிதா, தீப்ஷிகா, வினோத் சாகர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள நிலையில் மார்கன் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரைப் பார்க்கும் போது தொடர்ந்து நடைப்பெறும் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

சைக்கோ க்ரைம் த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.