ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Vignesh Shivan Talks About Suriya Gift: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் - விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

சூர்யா - விக்னேஷ் சிவன்

Published: 

06 Apr 2026 10:53 AM

 IST

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே முன்னணி நடிகரான சிலம்பரசனை வைத்து இயக்கினார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிகர்கள் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோரை வைத்து அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நலல் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவர் இரண்டாவதாக தமிழ் சினிமாவில் இயக்கிய படம் நானும் ரௌடிதான். இந்தப் படத்தில் நடித்த பிறகு தான் நடிகை நயன்தாரா மற்றும்  இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் மூன்றாவதாக இயக்கியப் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படம் இந்தி சினிமாவில் வெளியான ஸ்பெஷல் 29 படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார்;

அதன்படி இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் மறுஆக்கமாகவும், கலவையான விமர்சனங்களைப் பெற்றதாகவும் அமைந்திருந்தபோதிலும், சூர்யா சாருடன் இணைந்து பணியாற்றும் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். நீ மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என்று கூறி அவர் எனக்கு ஒரு காரைப் பரிசளித்தார். அதற்கு நான் அவரிடம், இது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கான பரிசு அல்ல, எதிர்காலத்தில் நாம் இருவரும் இணைந்து பணியாற்றவிருக்கும் படத்திற்கான முன்பணமாகவே நான் இதைக் கருதுகிறேன், என்று கூறினேன்.

Also Read… ரிலீஸ் கன்ஃபார்ம்… இன்று மாலை வெளியாகிறது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ட்ரெய்லர்

இணையத்தில் வைரலாகும் விக்னேஷ் சிவன் பேச்சு:

Also Read… டீசரைப் பார்த்து மொத்த படத்தையும் முடிவு செய்யாதீர்கள் – TN 2026 படக் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் உமாபதி ராமையா

Follow Us
Related Stories
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்
கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்
OTT Movie: தைரியமான பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி.. விறுவிறுப்பான இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
Vignesh Shivan: துப்பாக்கியில் விஜய் சார் சுட்டது 12 பேர்.. ஆனால் 13வது சுடப்பட்டவன் நான்- விக்னேஷ் சிவன்!
Ranbir Kapoor: ராமாயணா படத்தில் ரெட்டை வேடத்தில் ரன்பீர் கபூர்.. 2வது கதாபாத்திரம் என்ன தெரியுமா?
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்