Dhanush : தனுஷின் ‘சூதாடி’ படத்தை கைவிடக் காரணம்.. – வெற்றிமாறன் விளக்கம்!
Vetrimaaran And Dhanush Soothadi Movie Dropped Reason : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். இவரின் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு சூதாடி என்ற படமானது உருவாகவிருந்தது. இந்நிலையில், இப்படமானது கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி இயக்குநர் வெற்றிமாறன் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. தனுஷ் (Dhanush) முதல், விஜய் சேதுபதி (Vijay Sethupathi ) வரை என பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை 2 (Viduthalai part 2). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக வடசென்னை (Vada Chennai ) திரைப்பட பின்னணியில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் வேலைகள் தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன். தனுஷின் முன்னணி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு உருவாக்கவிருந்த சூதாடி (Soothadi) திரைப்படம் கைவிடப்பட்டது குறித்து ஓபனாக பேசியிருந்தார். மேலும் விசாரணை படம் உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தது தனுஷ்தான் என்றும் கூறியுள்ளார் . அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.




தனுஷின் சூதாடி திரைப்படம் கைவிடப்பட்டது குறித்தது வெற்றிமாறன் பேச்சு
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன், தனுஷின் நடிப்பில் சூதாடி படம் எதற்காகக் கைவிடப்பட்டது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு எழுத்தாளராக மற்றும் இயக்குநராகவும் நடிகர் தனுஷை மிகவும் மதிக்கிறேன். இந்நிலையில், தனுஷுடன் சூதாடி படத்தை இயக்க தொடங்கினேன், படத்தின் ஷூட்டிங்கும் 5 நாட்கள் நடந்தது. அப்போது எனது மனதில் சூதாடி படத்தை இயக்குவதற்கு விருப்பமே இல்லை என்று கூறலாம். அப்போதுதான் நான் தனுஷிடம், “எனக்கு இப்படத்தை இயக்குவதற்கு விருப்பமில்லை, வேறு படத்தை இயக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறினேன்.
வெற்றிமாறன் சூதாடி படம் கைவிடப்பட்டது பற்றிப் பேசிய வீடியோ :
#Vetrimaaran Recent
– When I wanted to make #Visaranai, I decided to stop ‘Soodhadi’, which he was supposed to act in. We had already shot for 5 days.
– I told #Dhanush, I don’t want to continue with this. I want to do something else.#VadaChennaipic.twitter.com/a226OvduTJ— Movie Tamil (@MovieTamil4) July 2, 2025
தனுஷ் என்னிடம், “ஓகே சார், உங்களுக்கு அந்த படத்தைப் பண்ண விரும்பும் இருந்தால் , நிச்சயம் செய்யுங்கள்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பின் நான் மீண்டும் தனுஷை சந்தித்தேன், அப்போதுதான் நான் அவரிடம் விசாரணை திரைப்படத்தின் கதை பற்றிக் கூறினேன். அதற்கு தனுஷ் என்னிடம், சார் எனக்குக் கதை முக்கியமில்லை. நான் நடிக்கிறேன் என அவர் கூறினார். அந்த அளவிற்கு தனுஷ் என் மீது நம்பிகை வைத்திருக்கிறார். இப்படித்தான் விசாரணை திரைப்படம் தனுஷின் தயாரிப்பில் உருவாக்கியது” என இயக்குநர் வெற்றிமாறன் ஓபனாக பேசியிருந்தார்.