Trisha Krishnan: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!

Trishas Silence At Airport: கடந்த சில வாரங்களாக விஜய் மற்றும் திரிஷா குறித்த பேச்சு மக்களிடையே அடிபட்டுவருகிறது. அந்த வகையில் தயாரிப்பாளரின் மகன் திருமணத்திற்கு விஜய் மற்றும் திரிஷா இணைந்து கலந்துகொண்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

Trisha Krishnan: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!

விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன்

Updated On: 

13 Mar 2026 13:36 PM

 IST

தமிழ் சினிமாவை தொடர்ந்து தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிப்பதில் விருப்பம் காட்டிவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் தமிழில் கருப்பு (Karuppu) என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்த படத்தய் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji) இயக்க, சூர்யா (Suriya) முன்னணி நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தொடர்ந்து சோஷியல் மீடியவிலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். திரிஷா மற்றும் நடிகர் விஜய் (Thalapathy Vijay) இருவரும் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் கல்பாத்தில் மகனின் திருமணத்திற்கு ஒன்றாக, ஒரே காரில் சென்று கலந்துகொண்டிருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே தளபதி விஜய் தனிப்பட்ட விஷயங்களில் சிக்கலில் இருக்கும் நிலையில், திரிஷாவுடன் அவர் கலந்துகொண்டிருந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா மத்தியிலும் தீவிரமாக பேசப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்று 2026 மார்ச் 13ம் தேதியில், சென்னை விமான நிலையத்திற்கு திரிஷா கிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், எந்தவித பதிலளிக்காமல் மற்றும் செய்தியாளர்களை கண்டுகொள்ளாமலே வேகமாக சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!

செய்தியாளர்களின் கேள்விக்கு திரிஷா பதிலளிக்காமல் சென்ற வைரல் வீடியோ குறித்த பதிவு:

இந்த வீடியோவில் செய்தியாளர்கள் திரிஷாவிடம், “விஜய்யுடன் திருமணத்திற்கு நீங்கள் சென்றது சர்ச்சையாக பேசப்பட்டுவருகிறது, அது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு எந்தவித பதிலையும் கொடுக்காமல் நடிகை திரிஷா, சென்னை விமான நிலையத்திற்கு வேகமாக சென்றார். இதற்கு அவர் சரியான பதில் அளித்திருந்தால், இந்த பிரச்சனை முடிவடிந்திருக்கும், அவர் ஏன் பதிலளிக்கவில்லை என இணையத்தில் பலரும் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்.. யோகி பாபுவின் கெணத்த காணோம் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

இது குறித்து தமிழ் சினிமா வட்டாரங்களில் பல பிரபலங்களும் கேள்வி எழுப்பியும், தங்களின் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து திரிஷா விரைவில் பதிலளிப்பாரா? என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துவருகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us
Related Stories
Sivakarthikeyan: அமரன் பட கிளைமேக்ஸை என் மனைவி பார்க்கவில்லை.. எனது மகள் கட்டியணைத்து அழுதார் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை – பேசில் ஜோசப்
கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை மறுசீரமைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது
Chiyaan Vikram: பிரச்சனைகள் ஓவர்.. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!
23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..