விறுவிறுப்பாக நடைபெறும் அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்… வெளியானது புது தகவல்
Atlee and Allu Arjun Movie Update: பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் அட்லி மற்றும் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் தற்போது பிரமாண்டமாக படம் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அட்லி - அல்லு அர்ஜுன்
தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜயை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். அதன்படி இயக்குநர் அட்லி மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் அடுத்தடுத்து தெறி, பிகில், மெர்சல் என மூன்று படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களுமே வெளியான போது ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை காப்பி அடிக்கப்பட்டது என்று பல சர்ச்சைகள் எழுந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாபெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி பாலிவுட் சினிமாவில் காலடி வைத்தார். அதன்படி பாலிவுட்டில் பாட்சா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் அட்லி ஜவான் என்ற படத்தை எழுதி இயக்கினார். இந்தப் படம் உலக அளவில் 1000 கோடிகள் ரூபாய்க்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானிற்கு முதல் தேசிய விருதை இந்தப் படம் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறினார் அட்லி.
விறுவிறுப்பாக நடைபெறும் அட்லி – அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங்:
இந்தநிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்குநர் அட்லி இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— The shooting of #AA22xA6, which brings together #Atlee and #AlluArjun, has now begun in Mumbai 🎬
— In this film, #JimSarbh, who played the villain in Kuberaa, is acting in an important role.
The movie is being made on a huge budget, and it is scheduled for a 2027 release 💥— Movie Tamil (@_MovieTamil) January 25, 2026
Also Read… என்னுடைய இசையில் அது சிறந்த படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்