சென்னையில் தொடங்கியது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ஷூட்டிங்
7G Rainbow Colony 2 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ளார் இயக்குநர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் முன்னதாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

7ஜி ரெயின்போ காலனி
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தான் நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறுவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி அவரவர் துறையில் சாதித்துக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வித்யாசமான கதைகளை மையமாக வைத்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தொடர்ந்து இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் செல்வராகவன்.
தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் என பிசியாக வலம் வரும் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நாயகனாக நடிகர் ரவி கிருஷ்ணா நடித்து இருந்த நிலையில் நாயகியாக நடிகை சோனியா அகர்வால் நடித்து இருந்தார். இதில் நாயகியாக நடித்த சோனியா அகர்வால் முதல் பாகத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடங்கியது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் இந்த 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்து இருந்த நிலையில் இதில் நடிகர் ரவி கிருஷ்ணா நாயகனாக நடிக்க உள்ள நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. பாடலை பாடி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லதா ரஜினிகாந்த்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #7GRainbowColony2, directed by Selvaraghavan, has commenced today in Chennai and Poonamallee. pic.twitter.com/ZvdnG6Ty6H
— Movie Tamil (@_MovieTamil) February 9, 2026
Also Read… Youth Movie: கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்.. நகைச்சுவையாக வெளியான வீடியோ இதோ!