பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்… தகாத வார்த்தைகளால் சண்டை!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோ வீடியோவில் பார்வதி மற்றும் கம்ருதினால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடுப்பானது தெரியவந்துள்ளது.

பிக்பாஸில் பார்வதி - கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்... தகாத வார்த்தைகளால் சண்டை!

பிக்பாஸ்

Published: 

02 Jan 2026 13:52 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 13-வது வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. மொத்தம் பிக்பாஸ் வீட்டில் தற்போது சபரி, அரோரா, சாண்ட்ரா, திவ்யா, சுபிக்‌ஷா, வினோத், விக்ரம், கம்ருதின் மற்றும் பார்வதி என 9 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த திங்கள் முதல் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு டாஸ்கிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெற்றிப் பெற்று தங்களது ஸ்ரெந்தை காட்டி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியே இல்லை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வீட்டிலும் வெளியே உள்ள போட்டியாளர்களும் கேள்வி எழுப்பி வந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் டாக் லைனான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கு இணங்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்று வருகின்றனர்.

இந்த வார தொடக்கத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்த பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் தற்போது சமாதானம் ஆன நிலையில் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் தங்களது சீப்பான கேமை விளையாடி கடுப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதனபடி அவர்கள் இன்றைய டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் கடுப்பேற்றுவது வீடியோவில் வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் பார்வதி – கம்ருதினால் எரிச்சலான போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்கில் ஒரு கார் கொடுக்கப்பட்டு அதில் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களும் உள்ளே இருக்கும்படி செய்யப்படுகிறது. இது பசர் டூ பசர் டாஸ்க். இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறி இறுதியில் இருக்கும் நபர் வெற்றியடைந்தார் என்று தெரிவிக்கப்படும். இந்த நிலையில் இந்தப் போட்டியில் கம்ருதின் மற்றும் பார்வதி இருவரும் மற்ற போட்டியாளர்களை காயப்படுத்தும் விதமாக மிகவும் சீப்பாக பேசுவது மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி சண்டையில் முடிவது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… மகுடம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட விஷால்!

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 2026-ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் மக்கள்… பிரபலங்கள் வெளியிட்ட வாழ்த்து பதிவு!

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி