100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது மோனிகா பாடல்

Monica Lyric Video | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கூலி. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவதாக வெளியான மோனிகா பாடலின் லிரிக்கள் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது மோனிகா பாடல்

மோனிகா பாடல்

Published: 

24 Aug 2025 17:47 PM

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த கூலி படம் வெளியாவதற்கு முன்னதாக படக்குழு படத்தில் இருந்து சிக்குடு சிக்குடு என்ற பாடலை முதலாவது சிங்கிளாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடல் வீடியோவில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் நடனம் ஆடுவது காட்டப்பட்டு இருந்தது. பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கூலி படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோவாக மோனிகா பெலூச்சி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் நடிகை பூஜா ஹெக்டே நடனம் ஆடியிருந்தார். மேலும் இந்த ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் கூலி படத்தில் கேமியோ செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லிரிக்கள் வீடியோவில் நடிகை பூஜா ஹெக்டே உடன் இணைந்து பிரபல நடிகர் சௌபின் ஷாகிர் நடனம் ஆடியிருந்தது ரசிகர்களிடையே வீடியோ பாடல் மீது எதிர்பார்ப்பை அதிகரித்து.

100 மில்லியன் பார்வைகளை கடந்த மோனிகா பெலூச்சி பாடல் லிரிக்கள் வீடியோ:

அதன்படி திரையரங்குகளில் படம் வெளியான பிறகு அந்த வீடியோப் பாடலை படத்தில் பார்த்த ரசிகர்கள் நடிகர்கள் பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் ஷாகிர் நடனத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் முன்னதாக படக்குழு வெளியிட்ட மோனிகா பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது தொடர்பாக கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… விஜயின் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபலங்கள்? வைரலாகும் தகவல்

கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… என்னால சினிமாவில் அப்படிதான் இருக்க முடியும் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சொன்ன விசயம்