Kantara Chapter 1: இதை மட்டும் பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு காந்தாரா படக்குழு கோரிக்கை!

Kantara Chapter 1 Crew Warning: கன்னட சினிமாவில் கேஜிஎப் படத்தை அடுத்தாக, ஒட்டுமொத்த இந்தியாவில் மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் காந்தாரா சாப்டர் 1. நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் முன்னணி நடிப்பில் இப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் ரசிகர்களை எச்சரிக்கும் வகையில் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Kantara Chapter 1: இதை மட்டும் பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு காந்தாரா படக்குழு கோரிக்கை!

காந்தாரா சாப்டர் 1 படக்குழு எச்சரிக்கை

Updated On: 

03 Oct 2025 13:51 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் 2025ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1). இப்படத்தை ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமானது, கடந்த 2022ம் ஆண்டில் வெளியான காந்தாரா படத்தின் முன் நடந்த கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் தெய்வம் சார்ந்த கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகிய நிலையில், கடந்தஹ் 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படமானது வெளியாகி மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காந்தாரா படக்குழு ரசிகர்களிடம் வேண்டுகோளாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. திரையரங்குகளில் வெளியாகவும் காந்தாரா சாப்டர் 1 பட காட்சிகளை வீடியோ எடுத்து ஊடகங்களில் பரப்பவேண்டாம் என படக்குழு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

ரசிகர்களை எச்சரித்து காந்தாரா படக்குழு வெளியிட்ட பதிவு :

திரையரங்குகளில் வெளியாகவும் காந்தார சாப்டர் 1 படத்தை வீடியோவாக எடுத்து வெளியிடவேண்டாம் என்றும், இது படத்தை மட்டுமல்ல, அதை உயிர்ப்பிக்க அயராது உழைத்த ஆயிரக்கணக்கானோரின் கனவுகள் மற்றும் முயற்சிகளையும் பாதிக்கிறது என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், காந்தாரா அத்தியாயம் 1 பெரிய திரைக்காக உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்… மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

இதனால் நீங்கள் ஒவ்வொரு ஒலியையும், ஒவ்வொரு உணர்ச்சியையும் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர முடியும் என்றும், இந்த பயணத்தை ஒன்றாகப் பாதுகாப்போம். மேலும் திரையரங்குகளில் காந்தாராவை மறக்க முடியாத அனுபவமாக வைத்திருப்போம் என, காந்தாரா சாப்டர் 1 படக்குழு ரசிகர்களை அன்புடன் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா படத்தின் முதல் நாள் வசூல் என்ன :

காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது காந்தாரா படத்தைவிடவும் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த படமானது சுமார் ரூ.120 கோடிகளில் தயாராகியிருந்ததாக கூறப்படும் நிலையில், முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இந்த படமானது முதல் நாளையே சுமார் ரூ.60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான தகவல் இந்தியா டுடே என்ற செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.