Vaa Vaathiyaar: வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு ‘எம்.ஜி.ஆர்’ நினைவிடத்திற்கு சென்ற படக்குழு!

Vaa vaathiyaar Movie crew: கார்த்தியின் முன்னணி நடிப்பில் பல தடைகளை கடந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் வா வாத்தியார். இப்படமானது எம்ஜிஆரின் கதையை மையமாக கொண்டு இயக்கியுள்ள நிலையில், 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று படக்குழு மரியாதையை செலுத்தி, ஆசிப்பெற்றுள்ளனர்.

Vaa Vaathiyaar: வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சென்ற படக்குழு!

வா வாத்தியார் திரைப்படக் குழுவினர்

Published: 

13 Jan 2026 14:36 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருப்பவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இப்படத்தை சூதுகவ்வும் படத்தை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumarasamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார். இப்படம் 2026 ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு கார்த்தி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு (MGR Memorial) சென்று மரியாதையை செய்து, ஆசிப்பெற்றுள்ளனர். இது தொடர்பான பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் அப்டேட் எப்போது? வைரலாகும் தகவல்

வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்தில் படக்குழுவினர் குறித்த பதிவு:

நடிகர் கார்த்தியின் இப்படம் எம்ஜிஆர் ரசிகர் ஒருவரின் பேரனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த நேரத்தில் பிறந்த ஹீரோ செய்யும் விஷயங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தி மற்றும் க்ரித்தி ஷெட்டியுடன் நடிகர்கள், ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படமானது ஒரு கலக்கல் மசாலா திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகவிருந்தநிலையில், தயாரிப்பாளர் கடன் பிரச்சனையால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நலன் படமாக இருக்காது – வா வாத்தியார் படம் குறித்து இயக்குநர் நலன் குமாரசாமி!

பல பிரச்சனைகளை கடந்து, இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 2026 ஜனவரி 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டி கார்த்தியின் முதல் வெற்றிப்படமாக இது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!
ஒரு கைக்குட்டையின் விலை ரூ.7 லட்சம் என்றால் நம்புவீர்களா? வேறெங்கும் இல்லை, இந்தியாவில் தான்..
வேகமாக உருகிய பனி.. 'சுனாமி' போல் ஏற்பட்ட வெள்ளம்!!
புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..