Thalaivar 173: ஆரம்பிகலமா? ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடக்கம்!
Thalaivar 173 Movie Update: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள திரைப்படம்தான் தலைவர் 173. இதை கமல்ஹாசன் தயாரிக்க, டான் பட இயக்குநர் சிபி சத்யராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

தலைவர் 173 படக்குழு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் கூலி என்ற படமானது வெளியாகியிருந்தது. இதை லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanaharaj) இயக்கியிருந்த நிலையில், இதை அடுத்தாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (jailer 2) படத்தில் இணைந்தார். இந்த படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், அனிருத் இசையமைத்துவருகிறார். இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திலே தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஜினிகாந்த் தனது ஷூட்டிங்கை முழுமையாக நிறைவு செய்திருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிப்பில், ரஜினிகாந்த் புது படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.
இதை சுந்தர் சி முதலில் இயக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் பின் வாங்கினார். இதையடுத்து டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படமானது தற்காலிகமாக தலைவர் 173 என அழைக்கப்பட்டுவரும் நிலையில், இதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: நமது கலாச்சாரத்தை பேசும்.. கருப்பு படம் ஏப்ரல் ரிலீஸ் – சாய் அபயங்கர் உறுதி!
தலைபவர் 173 படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் தொடக்கம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
ARAMBIKALAMA#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027#Rajinikanth@rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Cibi @anirudhofficial@APIfilms @homescreenent@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/LB5oy6G3D4
— Raaj Kamal Films International (@RKFI) March 5, 2026
இந்த் பதிவில் இயக்குநர் சிபி சக்கரவர்தியுடன், படக்குழுவினர் இணைந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “ஆரம்பிகலமா?” என படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் :
தலைவர் 173 திரைப்படத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைக்கவுள்ளார். இவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில்தான் தொடர்ந்து ரஜினிகாந்தின் 8க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது. தலைவர் 173 படமானது ஆக்ஷன் கலந்த பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக தயாராகவுள்ளதாம்.
இதையும் படிங்க: நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!
இது ஹாலிவுட் படமான “அவுட்பிட்” என்ற படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படமானது கிட்டத்தட்ட ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயராகவுள்ள நிலையில், இதில் யார் யார் நடிக்கிறார்கள் என இன்னும் உறுதியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறதாம். இது குறித்த தகவலை தாய் கிழவி பட நிகழ்ச்சியில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.