‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. மேல்முறையீட்டு மனு ஏற்பு!

ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜனவரி 27) ஜனநாயகன் வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. மேல்முறையீட்டு மனு ஏற்பு!

ஜனநாயகன் பட வழக்கில் தீர்ப்பு

Updated On: 

27 Jan 2026 11:24 AM

 IST

சென்னை, ஜனவரி 27: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்று (ஜனவரி 27) சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை  வழங்கியுள்ளது. அதன்படி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, மத்திய தணிக்கை குழு கேட்டுக்கொண்டபடி, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஜனநாயகன் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேசமயம்,  மீண்டும் பட வழக்கை தனி நீதிபதி விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: சாலைகளில் விசிலுடன் வலம் வரும் தவெகவினர்.. கடைகளில் விசில் விற்பனை அமோகம்..

ஜனநாயகன் படத்தில் சிக்கலுக்கு மேல் சிக்கல்:

ஜனநாயகன் படத்தில் ராணுவம் தொடர்பான காட்சிகள், வெளிநாட்டு சக்திகள் மத மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தலைமை நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என்றுகூறி, மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அதாவது, தணிக்கை வாரியம் கேட்டபடி, ஜனநாயகன் பட வழக்கில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் மேல் சிக்கல் நீடிக்கிறது.

அடுத்து என்ன செய்யபோகிறது படத்தயாரிப்பு நிறுவனம்:

படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு வேறு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், வழக்கை வேறு தனி நீதிபதிக்கு மாற்றி அங்கு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தயாரிப்பு நிறுவனம் மீண்டும் ஒரு வழக்கை தனி நீதிபதி முன்பு கோரிக்கையை மாற்றி தாக்கல் செய்ய உள்ளர்களா? அல்லது தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு இணங்க படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி மீண்டும் காத்திருந்து தணிக்கை சான்றிதழ் பெற்று படத்தை வெளியிடுவார்களா? என்பது குறித்து பொறுத்திருந்து காண வேண்டும். அப்படி, மறு ஆய்வு செய்யும்பட்சத்தில் 9 பேர் கொண்ட தணிக்கை குழு இப்படத்தை மறு ஆய்வு செய்வார்கள். அவர்களுடன் ராணுவம் தொடர்பான நிபுணர்களை வைத்தும் பார்வையிட வாய்ப்புள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானால் படம் வெளியாகுமா?:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலை உள்ளது. ஒருவேளை தேர்தல் அறிவிப்பு வெளியானால், படம் வெளியாவதில் பெரும் சிக்கல் எழும். நிச்சயமாக அரசியல் கட்சிகள் படத்தை வெளியிட தடை கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுக அதிக வாய்ப்புள்ளது. அதனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிடுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்து, கடைசி நேரத்தில் ரலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, நிற்காமல் அடுத்தடுத்து படத்திற்கு சிக்கல் நீடித்து வருகிறது. அதோடு, படம் எப்போது வெளியாகும் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.  இதனால், விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த தங்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
மம்மூட்டியின் பாதயாத்ரா படம்.. கொச்சியில் தொடங்கிய படப்பிடிப்பு..
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை நோட் பண்ணுங்க..
குடியரசு தின விழா - ஆண்கள் மட்டுமே உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைமை தாங்கும் பெண் அதிகாரி