Thalapathy Vijay: ஷாருக்கானிடமிருந்து அதை எப்போதும் கவனித்திருக்கிறேன் – தளபதி விஜய்!
Thalapathy Vijays About Shah Rukh Khan: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்படமானது இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் விஜய் பேசியிருந்த நிலையில், அவரின் முன்மாதிரிகள் யார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் ஷாருக்கான்
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. சினிமாவிலும் இவர் கிட்டத்தட்ட 33 வருடங்களை கடந்து சிறப்பாகவே படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அவரின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் (Jana Nayagan) படமானது இந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவிருந்தது. இந்நிலையில் சென்சார் பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இதன் பிரச்சனை முழுமையாக தீரவில்லை. தற்போதுவரையிலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் இதன் வழக்கு நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியானால் வரும் 2026 பிப்ரவரி மாதத்திற்கு வெளியானால்தான் உண்டு. இல்லையெனில் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இதுவரை தளபதி விஜய் பல வருடங்களாக எந்த பத்திரிகை நேர்காணலில் கலந்துகொண்டதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் விஜய் கலந்துகொண்டுள்ளார். அதில் பேசிய அவர், தனது அரசியல் முன்மாதிரிகள் (Political Role Models) யார் மற்றும் ஷாருக்கான் (Shah Rukh Khan) குறித்து குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் ‘வித் லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
தனது முன்மாதிரிகள் யார் என்பது குறித்து தளபதி விஜய் பகிர்ந்த விஷயம்:
சமீபத்தில் தளபதி விஜய் கலந்துகொண்ட நேர்காணலில் அவரிடம் தொகுப்பாளர், “உங்களை ஊக்குவிக்கும் தலைவர்கள் அல்லது ஆளுமைகள் யாராவது இருக்கிறார்களா?” என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், ” எனக்கு ஷாருக்கானின் உச்சரிப்பு மற்றும் அவர் எவ்வளவு தெளிவாக பேசுகிறார் என்பதை நான் பாராட்டுகிறேன். நான் எப்போதும் அவரிடம் இருந்து அதை கவனித்திருக்கிறேன்.
இதையும் படிங்க: கட்டா குஸ்தி 2 படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு விஷாலுக்கு கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – என்ன காரணம் தெரியுமா?
மேலும் எம்.ஜி.ஆர், ஜெலயலிதா மற்றும் கலைஞர் ஆகியோரை எனது முன்மாதிரிகளாகவும், அர்த்தமுள்ள ஒன்றை சாதித்த தலைவர்களாகவும் அவர்களை நான் பார்க்கிறேன்” என அந்த பத்திரிகை நேர்காணலில் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் பேசியது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு :
Q: Are there leaders or personalities who inspire you?
Thalapathy @TVKVijayHQ : I admire #ShahRukhKhan for his articulation and how clearly he speaks. I have always observed that. I also look up to MGR, Jayalalithaa and Kalaignar as role models and leaders who achieved something… pic.twitter.com/8oj1zRmy9U
— Actor Vijay Team (@ActorVijayTeam) January 30, 2026
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படமானது வெளியாகியிருந்தால் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையானது ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டிருக்கும். அந்த விதத்தில் இன்னும் இப்படத்தின் சென்சார் பிரச்சனை முடியதாக காரணத்தினால் எப்போது வெளியாகும் என படக்குழு உறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.