பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை… நடிகை சுவாசிகா ஓபன் டாக்

Actress Swasika: கடந்த ஆண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டப் படம் லப்பர் பந்து. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஸ்வாசிகா தற்போது சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை... நடிகை சுவாசிகா ஓபன் டாக்

சுவாசிகா

Published: 

20 Aug 2025 17:59 PM

சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடிகையாக வலம் வருபவர் நடிகை சுவாசிகா (Actress Swasika). இவர் தமிழ் சினிமாவில் வெளியான வைகை என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம் என நடித்து வரும் இவரு 15 ஆண்டுகளாகப் பலப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் நடிகை சுவாசிகாவை பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது கடந்த 2024-ம் ஆண்டு வெளியான லப்பர் பந்து படம் தான். இதில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இருவம் நாயகன்களாக நடித்து இருந்தனர். அதில் ஹரிஷ் கல்யாணுக்கு நடிகை சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி நாயகியாகவும் அட்டக்கத்தி தினேஷிற்கு நடிகை சுவாசிகா நாயகியாகவும் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து எழுதி இயக்கி இருந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் சுவாசிகாவின் மகள் தான் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. கிரிக்கெட் விளையாடுவதில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனாவின் காதல் இணைந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் அதிகப் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். நடிகை சுவாசிகார்.

பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சுவாசிகா:

அதன்படி நடிகை சுவாசிகா லப்பர் பந்து படத்தை தொடர்ந்து தமிழில் ரெட்ரோ மற்றும் மாமன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ரெட்ரோவில் நடிகர் சூர்யாவின் வளர்ப்புத் தாயாக நடித்து இருந்தார். அதில் இவரது காட்சிகள் குறைவு என்றாலும் ரசிகர்கள் அந்த கதாப்பாத்திரத்தை பாராட்டினர். அதனைத் தொடர்ந்து மாமன் படத்தில் நடிகர் சூரியின் அக்காவாக வாழ்ந்தார் என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர். படம் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை சுவாசிகா நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். அதில் தான் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருப்பதாகவும் தனக்கு இதுவரை அந்தமாதிரியான பிரச்னைகள் வந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகை சுவாசிகா பாலியல் தொல்லை என்பது பெண்களுக்கு சினிமாவில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் உள்ளது. ஏன் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த சமூகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை ஏற்படுகிறது என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!

சுவாசிகாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரப் படமாக இருக்கும் – வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!