2026-ம் ஆண்டில் வரிசைக்கட்டும் சூர்யாவின் படங்கள் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Actor Suriya Movies: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் வருகின்ற 2026-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே மாதம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த 2025-ம் ஆண்டே நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் 45-வது படமான கருப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் எதிர்பார்த்த நேரத்தில் முடிவடையாத நிலையில் படம் இந்த ஆண்டு வெளியாகாமல் தள்ளிப்போனது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஒரு பக்கம் சூர்யாவின் 45-வது படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக சூர்யா அவரது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது. இதன் காரணமாக சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா தனது 47-வது படத்திற்காக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2026-ம் ஆண்டில் வரிசைக்கட்டும் சூர்யாவின் படங்கள்:
அதன்படி இந்த 2025-ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் 2026-ம் ஆண்டு தொடர்ந்து மூன்று படங்கள் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி கருப்பு, சூர்யா 46, சூர்யா 47 ஆகியப் படங்கள் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
C-O-M-E-B-A-C-K — Suriya’s 2026#Karuppu directed by RJ Balaji 🎥🔥 – 2026 January 23rd #Suriya46 directed by Venky Atluri 🎬 – 2026 May#suriya47 directed by Malayalam director Jithu Madhavan ⚡ – 2026 Second Half pic.twitter.com/mxQus5QdYP
— Movie Tamil (@_MovieTamil) November 26, 2025