சூரியாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Karuppu Movie Release update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவுற்றுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.

கருப்பு
நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். மேலும் படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது. இது சூர்யா ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் ரெட்ரோ படத்தின் வெற்றி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது நடிகர் சூர்யா அவரின் 45-வது படத்தில் நடிக்க கமிட்டானார். இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். மேலும் படத்தில் அவர் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.
பண்டிகை நாளில் வெளியாகும் சூர்யாவின் கருப்பு படம்:
இந்தப் படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள் இது ஒரு பண்டிகைகால படம் என்று கருத்து தெரிவித்தனர். அதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது கருப்பு படம் நிச்சயமாக எதேனும் பண்டிகை நாளில் தான் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார்.
இதனால் இந்த ஆண்டில் அடுத்ததாக தமிழ் மக்கள் கொண்டாட உள்ள பட்டியலை இணையத்தில் வெளியிட்டு இதில் ஏதேனு ஒரு நாள் தான் படத்தின் ரிலீஸாக இருக்கும் என்று தீபாவளி, கிருஸ்துமஸ் மற்று அடுத்த ஆண்டில் வரும் பொங்கல் பண்டிகையை நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்
கருப்பு படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
On this special day of celebrating @Suriya_offl sir, we’re thrilled to present the powerful teaser of #Karuppu💥#KaruppuTeaser https://t.co/E6EwbngsWs#HappyBirthdaySuriya #கருப்பு #కరుప్పు #കറുപ്പ് #ಕರುಪ್ಪು
— Karuppu (@KaruppuMovie) July 23, 2025
Also Read… லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!